பிாித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை பிாித்தானிய அரசாங்கம் நேற்றையதினம் ஏற்றுக்கொண்டதனையடுத்து அடுத்த வாரம் முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பு மருந்து முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் அளிக்கப்படும் என பிாித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனமும் ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 95 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பைசர் பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக அமைந்துள்ள பிாித்தானிய அரசு இந்த மருந்தின் 4 கோடி டோஸ்களை வாங்கி உள்ளது
இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை என்பதுடன் இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசி மூன்று வார இடைவெளியில் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #பிாித்தானியா #பைசர் #கொரோனா #தடுப்பூசி #Pfizer