நுணாவில் குளக்கட்டுக் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிாிழந்துள்ளாா். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான தேவராசா லக்சன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் இணைந்து குளம் ஒன்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
நிலைதடுமாறி குளத்தின் உள்ளே விழுந்த அவரை அருகில் நின்ற நண்பர்கள் முயற்சித்த போதும் அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டததனால் அவர்கள் கை விட்டதாகவும் நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #சேற்றில்சிக்கி #மாணவன் #உயிாிழப்பு #கரவெட்டி