சீனாவின் யோங்சான் நகரில் உள்ள நிலக்கரிச் சுரக்கத்தில் கார்பன் மோனாக்சைட்டின் அளவு அதிகம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 18 பேர் உயிாிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகினற் நிலையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்ற நிலையில் கடந்த ஜூலை மாதம் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் ஜிலின் எனும் மாகாணத்தின் சாங்சுன் நகரத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் பலர் உயிாிழந்திருந்தனா்.
சீனாவில் தேவையான பாதுகாப்பு அம்சங்களை நிலக்கரிச் சுரங்க நிறுவனங்கள் முறையாகக் கடைபிடிக்காமையினால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது. #சீனா #நிலக்கரிச்சுரங்கம் #மூச்சுத்திணறல் #தொழிலாளர்கள்