கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு காவல்துறைப்பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கரறுவாத்தோட்டகாவல்துறைப் பிரிவின் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை – கோகிலா வீதி , வத்தளை காவல்துறைப்பிரிவில் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன, அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்படப்படவுள்ளன.
அத்துடன் பேலியகொட காவல்துறைப்பிாிவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கிரிபத்கொட காவல்துறைப் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் முடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது #lockdown , #கொரோனா #வெள்ளவத்தை #முடக்கப்படுகின்றன