கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 2030ஆம் ஆண்டுக்குள் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவா் என ஐ.நா. வின் மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு, பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால் நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வு இ்டம்பெற்றுள்ளது.
கொரோனாவின் கடுமையான நீண்டகால விளைவுகளால் மேலும் 20 கோடியே 70 லட்சம்பேரை கொடிய வறுமைக்கு தள்ளப்படுவா் எனவும் இதன் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் இந்த ஆய்வு அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் உற்பத்தித்திறனின் 80 சதவிகித இழப்பு 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தலைவர்கள் எடுக்கிற முடிவுகள், உலகை மிகவும் மாறுப்பட்ட திசைகளில் கொண்டு செல்லக்கூடும் எனவும் நிலையான வளர்ச்சி இலக்குகள், 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும் எனவும் அதில் தொிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #வறுமை #ஐநா #ஊரடங்கு #பொதுமுடக்கம்