தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அமைவாக,
நிமல் ஜீ.புஞ்சிஹேவா – தலைவர் மற்றும் உறுப்பினர்,
எம்.எம்.மொஹமட் – உறுப்பினர்,
எஸ்.பீ.திவாரத்ன – உறுப்பினர்,
கே.பி.பி பதிரண – உறுப்பினர்,
ஜீவன் தியாகராஜா – உறுப்பினர்,
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
ஜீவன் தியாகராஜா 1984ம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றிவருவதாகவும், Consortium of Humanitarian Agencies அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மூன்று அங்கத்தவர்கள் இருக்க முடியும். ஆனால் 20வது திருத்தத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மொத்தமாக ஐந்து அங்கத்தவர்கள் இருக்கமுடியும்.
20வது திருத்தத்தின் படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு தலைவர் உட்பட ஐவர் அங்கத்தவர்களாக நியமிக்கப்படவேண்டும். இதில் ஒருவர் கட்டாயமாக தேர்தல் ஆணைக்குழுவில் ஆகக்குறைந்தது பிரதி ஆணையாளர் பதவியில் இருந்தவராக இருக்க வேண்டும்.
19வது திருத்தத்தின் பின்னர் மீள் வடிவமைக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி நியமிக்கப்பட்ட தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கத்தவர் ரட்ணஜீவன் ஹுல் அங்கத்தவர் என், ஜே. அபேசேகர ஆகியோரது ஐந்தாண்டுகளுக்கான பதவிக்காலம் 2020 நவம்பர் 12ம் திகதியோடு முடிவிற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
#தேர்தல்கள்ஆணைக்குழு #தேர்தல்ஆணையாளர்நாயகம் #19வது திருத்தம் #சமன்சிறிரத்நாயக்க