Home உலகம் இஸ்லாமியவாத குழுக்களைக் குறி வைக்கும் சட்டத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்

இஸ்லாமியவாத குழுக்களைக் குறி வைக்கும் சட்டத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்

by admin

பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமிவாதக் குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் இது ஒன்றாகும்.

இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ள போதும் இதனை ‘பாதுகாக்கும் சட்டம்’ எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து இருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் எனத் தொிவித்துள்ளாா்.

பிரான்ஸின் குடியரசு மதிப்பீடுகளை ஆதரிக்கும் சட்டம், இணையத்தில் வெறுப்புரைகளை கட்டுப்படுத்தும், இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை விதிக்கும், வீட்டு முறைப் பள்ளிகளின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதை இந்த சட்டம் தடுக்கும் எனத் தொிவிக்கப்படுகின்றது.

பலதார மணத்தின் மீதான தடையை இந்த சட்டம் மேலும் இறுக்கமாக்கும். பலதார மணம் புரிந்தவர்களின் குடியிருப்பு உரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மருத்துவர்கள் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்பதுடன் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்

இஸ்லாமிய அமைப்புகளின் நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையைக் கோரும் பல புதிய விதிகள் இந்த சட்டத்தில் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள், பணியிடங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது எனும் விதிமுறை போக்குவரத்துப் பணியாளர்கள் , சந்தை ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்த சட்டம் வழியாக விரிவுபடுத்தப்படுகிறது

ஐம்பது லட்சம் முஸ்லிம் மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள பிரான்சே ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் சிறுபான்மையினரை கொண்ட நாடாகும்.

இதேவேளை பல முஸ்லிம் நாடுகளில் இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #இஸ்லாமியவாத #சட்டத்துக்கு #பிரான்ஸ் #அமைச்சரவை #ஒப்புதல் #அபராதம்

மூலம் -பிபிசிதமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More