பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தினை அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்.டி.ஏ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அனுமதிக்க டிரம்ப் அரச நிர்வாகத்தால், எப்.டி.ஏ அமைப்பு கடுமையான அழுத்தம் வழங்கப்பட்டதாக தொிவிக்கப்படுகின்ற நிலையில் அது உண்மை இல்லை என மறுப்பு தொிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைக்குள் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என எப்.டி.ஏ அமைப்பின் தலைவா் ஸ்டீஃபன் ஹானிடம் தொிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான போதும் அது உண்மை இல்லை என அவரே அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என டிரம்ப் தொிவித்துள்ளா்ா.
அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை திங்கள் அல்லது செவ்வாய் முதல் ஆரமிபிக்க தாங்கள் பைசர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என அமொிக்க சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் செயலர் அலெக்ஸ் அசார் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 2,92,000-த்தைக் கடந்துள்ள நிலையிலேயே இவ்வாறு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைசர் கொரோனா தடுப்பு மருந்து, பிரித்தானியா , கனடா, பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசு ஒழுங்காற்று அமைப்பினரால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #பைசர் #தடுப்புமருந்து #கொரோனா #டிரம்ப்