இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சர்வதேச விமான பயணங்களுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளாா்.
முதலில் வணிக மற்றும் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனத் தொிவித்துள்ள அவா் கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் வௌியிடப்படவுள்ளதாக தொிவித்துள்ள அவா் சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பது தொடர்பிலான நிரந்தர திகதி எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவா் தொிவித்துள்ளாா். #விமானநிலையங்கள் #சிவில்விமானசேவைகள்அதிகாரசபை