Home இலங்கை போதையில் அட்டகாசம் – இருவர் காயம்.

போதையில் அட்டகாசம் – இருவர் காயம்.

by admin

போதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று வீதிகளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அரியாலை முள்ளி பகுதியில் நேற்று நிறை போதையில் வீதியில் நின்ற மூன்று இளைஞர்கள் அவ்வீதி வழியாக பயணித்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கியுள்ளனர். 


தாக்குதலுக்கு இலக்கானவர்களில் இருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். 
அதேவேளை போதையில் இருந்த குறித்த மூவரும் அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீதும் கடையொன்றின் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. 

மூவரும் சுமார் அரை மணி நேரமாக வீதியில் நின்று அட்டகாசம் புரிந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  #போதை #அட்டகாசம் #காயம் #அரியாலை  #யாழ்_போதனாவைத்திய சாலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More