சங்கானை பொதுச் சந்தையில் 100 வி்யாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
சங்கானை ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும், சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும்
நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் என சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் வடலியடைப்பைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் சண்டிலிப்பாய் ஐயானார் கோவிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் சுதுமலை தெற்கைச் சேர்ந்த 56 வயதுடையவரும் என நான்கு பேர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
உடுவிலைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் சங்கானை பொதுச் சந்தை வியாபாரியாக உள்ள நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
#சண்டிலிப்பாய் #சங்கானை_பொதுச்_சந்தை #உடுவில்