நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்கான நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விண்ணப்பவடிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும் , யாழ்ப்பாணம் , நல்லூர் , வடமராட்சி வடக்கு , கரைச்சி , வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும் , உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை , வடமாகாண அலுவலகம் , 134, புகையிரத நிலைய வீதி , யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. #நடுத்தர #வீட்டுவசதிதிட்டத்திற்கு #விண்ணப்பங்கள்