டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 65 வயது சீக்கிய மதகுருவான சந்த் பாபா ராம் சிங் நேற்று புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம், கர்னால் அருகே உள்ள சிங்காரா கிராமத்தை சேர்ந்த மதகுருவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
அவர் இறந்தபோது, அவரது கையில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட தாள் ஒன்று இருந்தது எனவும் அதில் விவசாயிகளின் துயரத்தைத் தாங்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது எனவும் தொிவிக்கப்பட்டள்ளது.
அதை சந்த் ராம் சிங்தான் எழுதினார் என்று கூறப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மை தொடா்பில் காவல்துறை விசாாித்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த சிங்கு எல்லைப் பகுதியில் இருந்து, மதகுரு உடனடியாக கர்னால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்ததாக காவல்துறையினா் தொிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம், மூன்று வாரங்களைக் கடந்து அமைதியான வழியில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு புதிய திருப்பமாக, நேற்று புதன்கிழமை (டிசம்பர் 16), தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் 2020-ல் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனகட கோாி விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது #விவசாயிகள்போராட்டம் #மதகுரு #தற்கொலை