நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டிருந்தார்.
நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக கடந்த 08.12.2020 அன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதன்கிழமை (16.12.2020) மு.ப 11 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார். #நிந்தவூர் #பிரதேசசபை #கந்தசாமிப்பிள்ளைசுதாமதி