அடுத்த இரண்டு ஒலிம்பிக் தொடா்களில் ரஸ்யா தனது நாட்டின் பெயர், கொடியை பயன்படுத்த விளையாட்டு தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஸ்ய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருந்த நிலையில் அவா்களுக்கு ரஸ்யாவே உதவியாக குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் இருந்த தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திற்கு கொடுப்பதற்கு முன், அந்த தகவல்களை அழித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டியில் ரஸ்யா நாட்டின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து அல்லது நேர்மறையான சோதனைகளை மூடிமறைக்கவில்லை என நிரூபிக்கப்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக், 2022 கட்டார் உலக கோப்பையில் பங்கேற்க அனுமதிக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #ஊக்கமருந்து #ரஸ்யா #ஒலிம்பிக் #தடை #olympic