201
யாழ்ப்பாணம் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுகாதாரத் தொழிலாளிகளால் கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டுகின்றன.
யாழ்ப்பாணம் மாநகரின் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை இன்று (டிசெ.20) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.
கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் நீர் வழிந்தோடு செயற்பாடு பாதிக்கப்பட்டது. அதனால் வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளினால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. #யாழ்மாநகரில் #கழிவகற்றல் #செயற்பாடு #வாய்க்கால்
Spread the love