யாழ். தீவகப்பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பசுவின் உரிமையாளர் ஒருவர் இன்று (21.12.20) யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் ஊர்காவற்றுறை காவற்துறையினருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பசுவின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தில் வைத்து குறித்த பசு கன்று ஈனவிருந்த நிலையில் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பசு உரிமையாளர் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் காவற்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தே இவர் இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
#ஊர்காவற்றுறை#யாழ்_தீவகம்#மனிதஉரிமைஆணைக்குழு