அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளாா். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் எந்த அச்சமும் இன்றி முன்வர வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவா் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியுள்ளாா்.
78 வயதான ஜோபைடனும் அவரது மனைவியும் அவா்களது சொந்த நகரமான டெலாவேர், நெவார்க்கில் உள்ள கிறிஸ்டியானா மருத்துவமனையில் ஃபைசர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனா்.
அவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டுள்ளனா்.
அமொிக்காவில் சுமாா் 3 லட்சத்து 18 ஆயிரம் போ் கொரோனாவினால் உயிாிழந்துள்ள நிலையில் இதற்போது வரை பதவியில் இருக்கும் டிரம்ப் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதுடன் அவா் அமெரிக்கர்களின் தடுப்பூசி சந்தேகத்தை முறியடிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதுடன் தடுப்பூசிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இதை மக்களுக்குக் கொண்டுவரும் மருத்துவத் துறை பணியாளர்களுக்கும் தகஸ்ரீனது பாராட்டுகள் எடினத் தொிவித்துள்ளாா்..
அத்துடன் தடுப்பூசிகள் வைரஸின் பரவலை உண்மையில் தடுத்து நிறுத்துவதற்கு முன்பு இன்னும் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இது ஒரு ஆரம்பம் என உங்களுக்குத் தெரியும் என்ற எச்சரிக்கை தகவலையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
அதேவேளை அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஜோபைடன் #கொரோனா #தடுப்பூசி #அமொிக்கா