யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அனைவருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உடுவிலில் பெறப்பட்ட 120 பேரின் மாதிரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்கள் 120 பேருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. #உடுவில் #பிசிஆர் #கொரோனா #மருதனார்மடம்