கொவிட் பெருந்தொற்று நிலைமையின் அநுகூலத்தைப் பெற்றுக்கொள்ளாமை அநியாயமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காற்றினால் அல்லது வளியினால் இந்த பெருந்தொற்று இலங்கைக்குள் புகுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை என்பதாலும் இந்த பெருந்தொற்றின் நோய்க்காவி மனித உடல் என்பதாலும் இது இனங்காண இயலாத வகையைச்சேர்ந்த நுண்ணுயிரல்ல எனவும் கூறிய அவர் இந்த பெருந்தொற்று நாட்டுக்குள் பிரவேசிக்கவிருந்த ஒரே வழிமுறையாக அமைவது விமானநிலையம் அல்லது துறைமுகமாக அமைவதால் அதனை சிறப்பாக சோதனையிடக்கூடியதாக இருந்ததெனவும் அது அவ்வாறு இடம்பெறாமை இந்த நிலைமை தோன்ற பிரதான காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்விதமாக பெருந்தொற்று நாட்டுக்குள் பிரவேசித்தாலும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் ஊடாக அது இடம்பெறுவதால் அந்த அத்தனைபேரையும் முறையான தனிமைப்படுத்தல் செயற்பாங்கிற்கு உட்படுத்துவதன் ஊடாக இந்த பெருந்தொற்று சமூகத்தில் பரவிச்செல்வதை தடுக்கக்கூடியதாக இருந்ததெனவும் அது முறைப்படி இடம்பெறாமையால் நிலைமை மோசமானதெனவும் கூறினார்.
இன்றளவில் இலங்கை அந்த தடைகள் இரண்டையும் இழந்துள்ளதெனவும் இன்றளவில் நோயாளர்களின் எண்ணிக்கை பரிசோதனைகளின் அடிப்படையிலேயே பதிவாகின்றதெனவும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலுமாயின் இதனைவிட அதிகளவிலான நோயாளர்களை
கண்டுபிடிக்க இயலுமெனவும் வலியுறுத்தினார்.