அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அதிகளவில் கலப்பு மீன்கள் இரு தினங்களாக கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையின் பின்னர் கடந்த புதன்கிழமை(23) இருந்து இவ்வாறு இறந்த நிலையில் கலப்பு மீன்கள் கடற்கரையில் கரையொதுங்கி இருப்பதை காண முடிகின்றது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு கலப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன் மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் இரைக்காக தூக்கி செல்வதுடன் அப்பிரதேசமெங்கும் தூர்நாற்றமும் வீசி வருகின்றன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் உட்பட்ட பலரும் வருகை தந்தது நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர். #அம்பாறை #திருக்கோவில் #கடல்பரப்பில் #நன்னீர்மீன்கள்