Home உலகம் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி

ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி

by admin

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்ததனையடுத்து பிாித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் 7 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து கடந்த 21-ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 27-ம் திகதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று (27) முதல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

முதல் நாடுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 3 நாடுகளிலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடும்பணி ஆரம்பமாகவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முதல் நபராக ஜோ்மனியில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் 101 வயது நிரம்பிய எடித் குவாஷிலா என்ற மூதாடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல்கட்டமாக வயதானோருக்கும், முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோயை வெல்வதற்கு தடுப்பூசி முக்கியமாகும். இது எங்கள் வாழ்க்கையை திரும்பப்பெற அனுமதிக்கும். இது நம்பிக்கையின் நாள். அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பது ஒரு நீண்ட தூர முயற்சியாக இருக்கும் என ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தொிவித்துள்ளாா். #ஐரோப்பியநாடுகளில் #கொரோனா_தடுப்பூசி #பைசர் #ஐரோப்பிய_ஒன்றியம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More