Home இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

by admin

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோருவதுடன் அவர்களின் விடுதலை வலியுறுத்த ஒன்றிணைவோம் – அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை

அரசியல் கைதிகள் பலருக்கை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.


நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எமது உறவுகளின் விடுதலைக்காக இன,மத,கட்சி பேதமின்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவதுடன் தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றியும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #அரசியல்_கைதிகளின் #விடுதலை #கவனயீர்ப்பு_போராட்டம் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More