210
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love