குரேஷியாவில் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெட்ரீனியா எனும் நகரையே உருக்குலைத்துப் போட்டுள்ளது எனவும் இனி அந்த நகரம் மனிதர்கள் வாழ தகுதியற்றது எனவும் அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880-ம் ஆண்டு அ ரிக்டரில் 6.3 அலகுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது குரேஷியாவில் அதேபோல் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி உள்ளது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது
இந்த நிலநடுக்கத்தால் ஸ்லோவேனியாவின் அணு உலை தானாக செயல்பாட்டை நிறுத்தி உள்ளது. பெட்ரீனியா நகரில் மீட்பு பணிக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
குரோசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி PublishDecember 30, 2020 6:52 am
ஐரோப்பிய நாடான குரோசியாவில் நேற்றையதினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிாிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியால் ஏற்பட்ட நிலநடுக்கம் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டதாகவும் இதே பகுதியில் நேற்று முன்தினம் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
#croatia #நிலநடுக்கம் #குரோசியா