நேற்றையதினம் (டிசம்பர் 30) வெளியிடப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா 76.6 சதவிகிதத்துடன் 322 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பொக்ஸிங் டே டெஸ்டில் தோல்வியுற்றதுடன் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது மெதுவாக விளையாடியதனால் அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா 390 புள்ளிகள் மற்றும் 72.2 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.
புதன்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 101 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 360 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் , பங்களாதேஸ் அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #ஐசிசி #டெஸ்ட்_தரவரிசைப்பட்டியல் #அவுஸ்திரேலியா #இந்தியா