கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரசினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பல்வேறு தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன.
இதில் பைசர் தடுப்பு மருந்து 90 வீதம் பலனளிப்பதாக ஆராய்சிகள் தொிவ்க்கும் நிலையில் பல நாடுகளில் முதற்கட்ட தடுப்பு மருந்துகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்வதுடன் நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை வினியோகித்து கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது #பைசர் #தடுப்புமருந்தினை #அவசரகால_பயன்பாடு #உலக_சுகாதார_அமைப்பு #அனுமதி