‘ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிச் சந்தையிலே கிட்டிப்புல்லும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு…’
‘கொத்திருக்கே கொத்து… என்ன கொத்து? மாங்கொத்து. என்ன மா? விளையாட்டு மா. யாருக்கு வேண்டும்? போட்டுத்து போ!…’
இவ்வாறாக கிராமப்புறங்களில்சிறார்களினால் சந்திகளிலும் தெருக்களிலும் பாடப்படும் பாடல் ஓசைகளைக் கேட்பது என்பது இன்றைய சூழலில் குறைந்துகொண்டு வருகிறது. காரணம் காலனியத்தின் பின்னர் அறிமுகமாகிய விளையாட்டுக்களின் அறிமுகத்தினாலும் ஆதிக்கத்தினாலுமே ஆகும்.
பொதுவாக விளையாட்டுக்கள் என்பது பொழுது போக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் விசேடமாக கற்றல் நோக்கத்திற்காகவும் நடாத்தப்படும் ஒரு செயற்பாடாகும். அன்றைய சூழலில் எம் மூதாதையர் எமக்குச் சொல்லிக் கொடுத்த எம் விளையாட்டுக்களில் அனைவரும் எம் சொந்த மண்ணிலேயே உருண்டு புரண்டு புளுதி படிய கூடி விளையாடிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியினை இன்பத்தை சுதந்திரத்தை இலகுவில் மறந்துவிட முடியாது. அங்கு சுதந்திரம் என்பது இயல்பானதாகக் காணப்பட்டது. செலவீனங்கள் அற்றதாக இயற்கை வெளியிலே இயற்கையோடு ஒட்டி உறவாடும் தருணங்களாக அவை இருந்தன.
இன்றைய சூழலில் பெரும்பாலும் விளையாட்டக்ள் என்பது ‘பதினொரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்’ என்ற பெர்னாட்சாவின் கருத்துப் படியே காணப்டுகின்றது. காரணம் என்னவெனில் காலனிய நவீன சிந்தனையின் ஊடாக கட்டமைப்பு ரீதியாக விளையாட்டுக்களை வகைப்படுத்தி கட்டுப்பாடுகளை கொண்டு திறன் உடையவர் மாத்திரமே விளையாடலாம் என்றும் பங்குபற்றுவர்களின் எண்ணிக்கையிலும் வரையறைகளைக் கொண்டு குறுகிய எல்லைக்குள் வடிவமைக்கப்பட்டே காணப்படுகின்றது.
இன்று பெரும்பாலும் விளையாட்டுக்கள் வியாபாரத்திற்குரியதாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் எம் பாரம்பரிய விளையாட்டுக்களில் அவ்வாறு இல்லை. அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களின் திறமைகளை எவ்வித கட்டுப்பாடுகளோ திணிப்புக்களோ இல்லாது சுதந்திரமாக வெளிக்கொண்டுவரும் களமாவே அவை அமைகின்றன.
நவீன சிந்தனைகளின் விளை பொருளாக சிறார்கள் இன்று பாடசாலை விட்டு வீடு திரும்பியதுமே கம்பியுட்டர் பயிற்சி , மேலதிக படிப்பு , இரவு நேர வகுப்பு என கல்வியில் போட்டி என்ற சிந்தனைக்குள் உட்படுத்தப்பட்டு பெற்றோர்களின் பெயர், மதிப்பு, பேராசைகளுக்காக ஓய்வின்றி இயக்க முற்படுகின்ற வேளையிலே சிறார்கள் விளையாட்டுக்களை மறந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் உடல் கெட்டு மனமும் பாதிக்கின்றது. விளையாட்டு என்றால் உழஅpரவநச பயஅநளஇ உசiஉமநவ இகுழழவடியடட என்றே கூறுகின்றனர்.
ஆனால் எம் நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு மரபு வழியாக விளையாடப்பட்டு வருகின்றதான விளையாட்டுக்களே எம் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். மக்களின் சமூக நிலை, வாழ்க்கை முறைமைகள், குழு மனப்பான்மை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியனவாக அம் மக்களின் நிலத்தோற்றங்;;;;;;களை அடிப்படையாகக் கொண்டு இவ் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ் விளையாட்டுக்களில் நாம் வாழ்வியலில் கற்க வேண்டிய முக்கியமான பல ஆற்றல்களை வளர்க்க கூடியதாக இருக்கின்றது. அதிகமாக சிந்திக்கும் திறமை, நுணுக்கங்களை அறிதல், ஒப்பிட்டு அறியும் ஆற்றல் என மனித சுயகற்றலை வளர்க்கும் தன்மைகள் நிறையவே காணப்படுகின்றன.
ஊர் விளையாட்டுக்களில் ஓர் அணியைத் தெரிவு செய்வது தொடக்கம் அது முடியும் வரையான அனைத்து செயற்பாடுகளும் எம்மை நல்வழிப் படுத்துவனவாகவே இருக்கும். உதாராணமாக ஒரு சிக்கலான இடத்தில் நாம் மாட்டிக் கொண்டுள்ள வேளை அவ்விடத்தில் இருந்து எவ்வாறு நாம் தந்திரோபாயங்களை கையாண்டு தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதனை ‘நாயும் புலியும்’ எனும் விளையாட்டு எம் வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டியதை உணர்த்தி நிற்கின்றது.
இன்றைய சூழலில் நோய்கள் ஏற்பட்டால் மாத்திரமே உடற் பயிற்சிகளை நேரம் ஒதுக்கிச் செய்வார்கள் ஆனால்; எம் பாரம்பரிய விளையாட்டுக்களில் அனைத்து வகையான பயிற்சிகளும் இயல்பாகவே காணப்படுகின்றன. திறந்த வெளியிலே பல விதமான சத்தங்களை எழுப்புகின்றனர். மனம் திறந்து பாடுகின்றனர். கிட்டி அடித்தலின் போது மூச்சியினை அடக்கிப் பிடித்து கொண்டு ஓடுகின்றனர் அதனோடு இணைந்து பாடலையும் பாடிக்கொண்டு செல்கின்றனர். இதன் போது மூச்சுப்பிற்சி , குரல்பயிற்சி , உடற்பயிற்சி என பல வகை பயிற்சிகளும் கிடைக்கின்றது.
பொதுவாக மாலை நேரங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிச் சந்திகளிலும் வயல் வெளிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நில அமைப்பு முறைமைகளுக்கு ஏற்றாற் போன்று சிறார்கள் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனோடு இணைந்து பருவகாலங்களை அடிப்படையாகக் கொண்டும் விளையாட்டுகள் மாறுபட்டனவாகக் காணப்படுகின்றன. சாதாரண காலங்களில் கிட்டிப்புல், நாயும் புலியும், நொண்டி போன்றவைகளும் பண்டிகை காலங்களில் ஊஞ்சல் கட்டுதல், பம்பரம், வழுக்குமரம் எனப் பல வகை விளையாட்டுக்களை விளையாடுவார்கள்.
இன்றைய நவீனத்துவ சூழலில் சிறார்கள், மாணவர்கள், குழந்தைகள் இவைகளை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். காரணம் என்னவென்று நோக்கினால் இன்றைய நவகாலனிய நவீனத்துவத்தின் ஆதிக்க தாண்டவத்தினால் இவர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்த இடத்தில் இருந்து வியர்வை சிந்;;தாமல் விளையாடும் விளையாட்டுக்களாக தொலைக்காட்சி கார்டூன்கள் ,வஎ பயஅநள இ எநனழை பயஅநளஇ உழஅpரவநச பயஅநள என தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடுகளிலே ஓர் இடத்தில் இருந்து கொண்டே தனிமையில் நேரங்களை செலவிடுபவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் கண்பார்வைக் குறைபாடுகள், சோம்பேறித்தனம், மன அழுத்தம் என்று பல ஆபத்தான நிலைமைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதனை அறிந்து இன்றைய சூழலில் மாணவர்களை சிறுவர்;களை ;;குழந்தைகளை ஓர் ஆழுமை உள்ளவர்களாகவும் சிறந்த செயற்பாட்டாளர்களாகவும் மற்றும் அவர்களை சுறுசுறுப்போடும் இயங்க வைக்கும் நோக்கில் படிப்புக்கு விளையாட்டுக்கள் தடை இல்லை என்ற எண்ணத்தை உடைத்தெறியும் நோக்கில் எமது பாரம்பரிய விளையாட்டுக்களை அரங்க பயிற்சிக்காகவும் தனிமனித ஆழுமைகளை விருத்தியடைய செய்வதற்காகவும் மற்றும் சிறுவர்களின் ஆடுதல் ,பாடுதல், கதை கேட்டல் , கதை கூறுதல் , கீறுதல் , வரைதல் , கொட்டில் கட்டுதல் போன்ற ஆளுமை விருத்திக்கான விளையாட்டுக்களமாக மாற்றி அதனை சிறுவர் கூத்தரங்காக வடிவமைத்தும் பாடசாலை மட்டங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் இன்றைய நாடக ஆழுமைகளினதும் இச் செயற்பாடானது பாராட்டத்தக்கதோர் செயற்பாடாகம்.
பாரம்பரிய விளையாட்டுக்களான கிட்டியடித்தல், சிலம்;பாட்டம், நாயும் புலியும், கள்ளன் பொலிஸ், நொண்டிக்கோடு, கிள்ளிக் கிள்ளிப் பிராண்டி, வழுக்கு மரம், ஊஞ்சல், கோலிக்குண்டு போன்றவற்றை புத்தகங்களிலும் கேட்டும் மட்டுமே இன்றைய சூழலில் அறிந்து கொள்கின்றனர். இதன் காரணமாக இன்றைய 21ஆம் நுற்றாண்டில் காலனிய நவீன சிந்தனைகள் தலைவிரித்தாடினாலும் பாரம்பரிய விளையாட்டுக்களினால் வளர்த்தெடுக்கப்படும் புத்திக்கூரிமை, பார்வைக் கூர்மை, கவனிப்புத்திறன், சிந்தனைத் தூண்டல், மன அழுத்தங்களைக் குறைத்தல், இரத்த ஓட்டம் சீராக்கல், வலிகளைப் போக்கல், சிறந்த திட்டமிடும் தன்மை, சுதந்திரம், மகிழ்ச்சி, உடற், குரல், மூச்சுப் பயிற்சிகள் எனப் பல வாழ்வியல் நன்மைகளைத் தரும் பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய கல்வி முறைக்குள் உள்வாகியோ அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக இதற்கான நேரங்களை ஒதுக்கியோ இவர்களை இவ் விளையாட்டுக்களில் ஈடுபட வைப்பதன் மூலம் அவர்ளின் ஆரோக்கியம் சிறந்து விளங்குவது மாத்திரம் இன்றி எமது பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் அத்தோடு அவர்கள் எவ்விடத்திலும் முன்னின்று செயலாற்றக் கூடிய துடிப்புள்ள ஆளுமை உள்ளவர்களாக மாற்றும் வல்லமை இப்பாரம்பரிய விளையாட்டுக்கிளில் காணப்படுகின்றது.
சுந்தரலிங்கம் சஞ்சீபன்
(சந்திவெளி மட்டக்களப்பு)
நாடகம் அரங்கியலும் சிறப்புக் கற்கை,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.