கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி, தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம்.
எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல் எனத் தொிவித்துள்ளாா்.
எனினும் இந்த தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் திகதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #இந்தியா #கோவிஷீல்டு #கோவாக்சினுக்கு #அவசரகால_பயன்பாடு #அனுமதி