162
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியும் எனவும் , சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Spread the love