ஆபிரிக்க நாடான நைகரில் உள்ள டொம்பாங்கோ, ஸாரூம்தரே ஆகிய இரு கிராமங்களில் நேற்றையதினம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் பிரிஜி ரபினி, அந்த இரு கிராமங்களுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்துள்ளாா்.
நைகர் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நைகரிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
2002-ல் ஆரம்பிக்கப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடா்புடைய போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாக தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்த அமைப்பினரால் இதுவரை சுமார் 27,000 போ் கொல்லப்பட்டுள்ளனா் என்பதுடன் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #நைகர் #தீவிரவாதத்_தாக்குதல் #போகோஹராம்