158
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை நேற்றைய தினம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும்
அங்கு குடிதண்ணீர் குடித்ததாகவும் அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார். #மருதனார்மடத்தில் #கொரோனா #பருத்தித்துறை #புலோலி
Spread the love