162
“முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவ்விடயத்தில் தலையிடப் போவதில்லை எனவும், பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை காவற்துறையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலையில் மட்டுமே இராணுவம் தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love