கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாாிய தீ விபத்தில் கடற்கரையில் அமைந்திருந்த 66 கடைகள் எரிந்து அழிவடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதி அம்மன் கோவில் பகுதியில் நெருக்கமாக தகர ஷீட்கள், இரும்புக்கம்பி, மூலம் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பொருள்கள், நறுமணப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கைவினைப் பொருள்கள், துணி வகைகள் என பலவிதமான பொருள்களை விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.
இன்று சனிக்கிழமை அதிகாலை அங்கு தீப்பற்றி கடைகள் எரியத் தொடங்கியதாகவும் தீயணைப்புப் படையினர் உடனும் சென்ற போதிலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பின்னரே தீ அணைக்கபட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து அழிவடைந்துள்ள நிலையிழல் கன்னியாகுமரி போ காவல்துறையினா் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவகம் ஒன்றில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் இந்த விபத்தில் வெடித்து சிதறியதாகவும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கன்னியாகுமரி_கடற்கரை #தீவிபத்து