நேற்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலையின்காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 74 குடும்பத்தை சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழில் 74குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பானவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழில் கடும் மழை – 8 குடும்பங்கள் பாதிப்பு
January 12, 2021 6:40 am
யாழ். குடாநாட்டில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தெல்லிப்பளை, மருதங்கேணி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் #யாழ்_மாவட்டத்தில் #கடும்_மழை #குடும்பங்கள் #பாதிப்பு