158
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைமையகத்தில் இன்று (13.01.21) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தவிசாளராக, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும், பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டாரவும், கட்சியின் பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பா வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love