300
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா அதிகரித்ததன் காரணமாக சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் திறக்கப்பட்டுள்ளன.
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம் (18.01.21) திருநெல்வேலி பொதுச்சந்தை மருதனாரமடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் காவற்துறையினர், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love