231
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இராணுவத்தின் 9ஆவது காலாற்படை ரெஜிமண்டினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குமார வீரசூரிய மற்றும் அவரது நண்பர்களின் முழுமையான அனுசரனையுடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேசத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்படி இந்த வீடு கையளிக்கப்பட்டதுடன், இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Spread the love