167
வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லேவின் ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்பட்ட உபகரணங்களை கடந்த 16 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷனா பதிரானா உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.
இலங்கையின் பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னம் விமானப் படைத் தளபதியினால் இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேவுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
Spread the love