இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.

இலங்கையின் 3 தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் கால் பதிப்பதனால் அடுத்த தீவில் தனது பிடியை இறுக்க இந்தியா பெரும் பிரயத்தனத்தையும் அழுத்தமும் பிரநோகிப்பதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ வடக்கு மீனவர்களாகவே இருக்கப்போகின்றது.

சுற்றுச் சூழலிற்கு அமைவான மின் உற்பத்தி திட்டமென 2017ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட காற்று, சூரிய மின்கலம், மின்கலம் மற்றும் எரிபொருள் உள்ளடக்கியதான கூட்டு மின் உற்பத்தி நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நெடுந்தீவு, அனலைதீவு, நைனாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களினதும் தொழில் மையங்களிற்குமான மின்சாரத்தை தங்கு தடை இன்றி உற்பத்தி செய்வதே நோக்கம்.

இதன் மாதிரி ஒன்று தற்போது சிறிய அளவில் அனலைதீவில் இயங்குகின்றது. இந்த வகை திட்டத்தினை முன்னெடுக்கும் சமயம் அதற்கான நிதியினை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளதனையடுத்து பணியை நிறைவேற்றும் சர்வதேச தர நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. அதிலே பலர் விண்ணப்பித்தாளும் சினோசர் என்னும் சினா நாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு 2021-01-18ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தீவுகளை குறிவைக்கும் சினா அரசு.

இந்த திட்டம் மூலம் தீவுகளில் வாழும் மக்களிற்கு தேவையான மின்சாரம் தடை இன்றிக் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடம் கிடையாது. ஆனால் தீவுகளில் சீனா நிலைகொள்வது நெடுந்தீவில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள இந்தியாவிற்கு பூகோள அரசியல் போட்டி அதிகரிப்பையே உண்டு பன்னும் . இதனால் இந்தியா கச்சதீவு தொடர்பான தனது பிடியை மேலும் அதிகரிக்கவே எண்ணும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்காது என்பதனை தெரிந்து கொண்டும் இந்த திட்டத்தை சீனாவிடம் வழங்க இலங்கை அமைச்சரவை எவ்வாறு தீர்மானித்தது என்பதே பெரும் கேள்வியாகவுள்ளது. அத்தனை சவாலையும் தாண்டி திட்டத்தை சீனாவிடம் வழங்கினால் ஏற்கனவே கச்சதீவை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியாவின் அழுத்தம் ஆரம்பித்து விட்டது. இதற்கான பேச்சுக்களும் சூடு பிடிக்கின்றது. கச்சதீவை மீளப் பெற வேண்டும் எனவும் இந்திய மீனவர்கள் போராடுகின்றனர் . இந்த ஆண்டிற்கான கச்சதீவு உற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு உற்சவம் இந்தியாவின் தலைமையில் என இந்தியாவின் ஒரு தரப்பு முழங்குகின்றது. இவற்றில் எது நடந்தாளும் பாதிப்படைவது வடக்கு மீனவர்கள்தான் என்பது சாதாரண மக்களிற்கே தெரிந்த விடயம்.

இலங்கையின் மீன்பிடி அமைச்சராக இருப்பவரே வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதியாகவுள்ள நிலையில் இது தொடர்பில் கரிசணை கொள்ளாதது ஏன் என்ற பெரும் கேள்வி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களிற்காக தீவுகளில் ஏற்கனவே இடங்கள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வரைபடமும் இறுதி செய்யப்பட்டுள்ள போதும் ஒரு தீவின் நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்ற அடிப்படையில் முழுமை பெறாதபோதும் நெடுந்தீவில் நெலுவிளிப் பகுதியில் உள்ள திருலிங்கபுரத்தில் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் பணிகள் முன்னெடுக்கும் வகையில் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டு விட்டது.

இரண்டு வருட திட்டமாக வழங்கப்படும் இந்த உற்பத்தி நிலையங்கள் மூலம் மெகா வாற்ஸ் அளவு உற்பத்தி இல்லாத போதும் கிலோ வாட்ஸ் உற்பத்திகளே இடம்பெறும் ஏனெனில் அவை இந்த தீவுகளின் தேவைக்கு போதுமானதாகவே உள்ளது. இவ்வாறு அந்த தீவுகளின் தேவைக்கு என்னும் பெயரில் இடம்பெறும் திட்டம் காரணமாக பிராந்தியத்திலேயே ஓர் பதற்றம் அல்லது அச்சத்தை தெரிந்துகொண்டே இலங்கை அரசு உருவாக்குகின்றது என இந்தியா எண்ணுகின்றது. அதாவது இந்தியாவும் சீனாவும் என்றுமே தின்னக் குடிக்க தெளிவென்னை போன்றவர்கள். எல்லையில் ஆயுதம் தூக்க கூடாது என்பதற்காக அடிபட்டே உயிரிழப்பவர்கள். இந்தியாவிற்கு அண்மையில் 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை எடுப்பதனை விரும்பமாட்டார்கள் எனத் தெரிந்தும் வழங்கியமையினால் நிச்சயமாக பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள் என்பதில் ஐயமே கிடையாது.

கச்சதீவை விட்டால் தனது இருப்பிற்கு ஆபத்து என கருதும் இந்தியா.

இந்தியா தனது பாகிஸ்தான், சினா எல்லையில் பாதுகாப்பை ஏற்படுத்தியது மட்டுமன்றி எதிர் காலத்தில் தமிழ்நாடு கரைநோரத்திலும் எல்லைப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டிய ஆபத்திற்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.

இந்தவகையான சர்ச்சை ஆரம்பமாகும் அதே தினத்தில் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இந்தியாவின் ஜெகதாப் பட்டினத்தில் பதிவைகொண்டபோதும் இராமேஸ்வரத்தில் தரித்திருந்து 4 இந்திய மீனவரின் படகு நெடுந்தீவிற்கும் கச்சதீவிற்கும் இடையே அதாவது நெடுந்தீவிற்கு மேற்கே 8 கடல் மைல் தூரத்தில் கடற்படை படகுடன் மோதியதில் முழுமையாக சிக்குண்டு நீரில் மூழ்கி விட்டது. இருப்பினும் நான்கு மீனவர்களிற்கும் நடந்தது மர்மமாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் அகப்பட்ட ட்ரோளரில் வயலஸ் வசதி இருந்ததாகவும் சம்பவம் தொடர்பில் ஏனைய படகுகளிற்கு தகவல்களை வழங்கியதோடு உதவியும் கோரினர் என்றும் சம்பவம் இடம்பெறும்போது அப் பகுதியில் இலங்கை கடற்படையினரின் 3ற்கும் குறையாத படகுகள் நின்றதாக இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின்போது கடற்படையின் ஓர் டோறா சேதமடைந்துள்ளதாக கடற்படை பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் தமது காணாமல்போன மீனவர்களைத் தேடி இந்திய மீனவர்கள் 19ஆம் திகதி இலங்கை எல்லைவரை வந்த தேடியபோதும் கிடைக்காது 20ஆம் திகதி காலையும் 3 படகில் 15 இந்திய மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டபோது 4 மீனவர்களும் மீட்கப்பட்டு விட்டனர் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என கடற்படையினரின் p 410 இலக்கம் பொறிக்கப்பட்ட படகில் இருந்த இலங்கை கடற்படையினர் காலை 9 மணிக்கு தெரிவித்தனர் இதனாலேயே தேடுதலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கரை திரும்பி திரும்பினர் ஆனால் மாலையில் சடலம் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராயா தெரிவிக்கின்றார்.

மீனவர்களின் இறப்பிற்கு நீதி கோரும் தமிழக மீனவர்கள்.

கடற்படையினரின் தேடுதலில் உயிரிழந்த தமிழக மீனவர்களினது என 20 ஆம் திகதி மீட்கப்பட்ட இரு உடல்களில் ஒன்று யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து 2009ஆம் ஆண்டு உயிரைக் காக்க தமிழகத்திற்குத் தப்பிச் சென்று மண்டபம் முகாமில் அகமியாக வாழும் இளைஞன் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலி அடிப்படையில் தொழிலிற்கு வந்தபோது உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது. எஞ்சிய இருவரது உடல்களும் 21ஆம் திகதி மீட்கப்பட்டது.

இக் காலத்தில் இந்திய மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிப்பதை இலங்கை கடற்படை தடுப்பதாக கூறி நாளை மேற்கொள்ளவுள்ள போராட்டத்திற்காக தமது படகுகளிற்கு கறுப்புக் கொடிகள் கட்டி மீனவர்கள் தயாராகினர். இவற்றின் அடிப்படையில் இலங்கையை அடிப்படையாக் கொண்டு இதுவரை இடம்பெற்ற சர்வதேச அரசியல் வியூகம் தற்போது யாழ்ப்பாணத்தை மையமாக வைத்தும் வகுக்கப்படுகின்றது. இந்த நிலமையில் இந்தியா தனது இருப்பை நிலைநாட்ட எண்ணி அதாவது தமது நாட்டின் பாதுகாப்பு என்னும் பெயரில் கச்சதீவு கோரிக்கையை வலுப்படுத்தினால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமே அதிகம் பாதிக்கப்பட்டாள் தமிழர்களிற்கும் தமிழ் நாட்டு தமிழர்களிற்குமான மனக் கசப்பே அதிகரிக்கும் என இலங்கைத் தலைவர்கள் எண்ணக்கூடும். இதனை சமாளிக்க அரசு இந்தியாவைத் திருப்திப்படுத்தவே முயலும் அதற்காகவும் தமிழர் தாயகத்திலேயே இடம் ஒதுக்கினாலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை.

அவ்வாறன சூழலிலேயே 18ஆம் திகதி இரவு கடற்படையினரின் டோறாவுடன் மோதிய படகில் இருந்த நான்கு இந்திய மீனவர்களுமே உயிரிழந்த்தாகவும் அவர்களது உடல்கள் கச்சதீவுப் பகுதியிலே கரை ஒதுங்கியதாக தெரிவித்த கடற்படையினர் மீனவர்களின் உடல்களை மீட்டு எடுத்து நடுக்கடல் வைத்து இந்தியாவின் கரையோர காவல்படையினர் வசம் ஒப்படைக்க ஏற்பாடுகள் இடம்பெற்றது ஆனால் இந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பிரேத பரிசோதனை அறிக்கையுடன் சமர்ப்பிக்கு இந்தியா கோரியது. இதனால் தற்போது மீட்ட உடல்கள் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டது. இதனால் தமிழக மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக இந்தியாவை கிள்ளிக் கீரையாக இலங்கை அரசு நினைக்கும் அழவிற்கு சீனாவின் ஆதரவு இருக்கும் தைரியம் உற்காசத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறானால் இலங்கை என்னும் சிறு துண்டில் எத்தனை நாடுகள் கண் வைத்து தமது அரசியலை நடாத்த இலங்கை அரசும் தமது பங்கிற்கு அரசியல் ஆதாய அரசியல் நடாத்த முனைகின்றதே அன்றி இறையான்மை அரசியல் என்பதெல்லாம் கிடையாது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் இனப் பரம்பலை மாற்ற சிங்கள குடியேற்றமும், விகாரைகள், நில ஆக்கிரமிப்புக்கள் என அனைத்தும் தங்கு தடையின்றி இடம்பெறும் சூழலில் இனி சீனா, இந்தியா என்ன அடுத்து பாகிஸ்தான் வந்தாளும்ஙாச்சரியப்பட ஏதும் இல்லை என்கின்ற பூகோளப் போட்டியும் ஆரம்பித்து விட்டது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.