148
பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் முக்கச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Spread the love