Home இலங்கை காலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு!

காலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு!

by admin

யார் இந்த கமலா அக்கா?

மட்டக்களப்பின் பெண் ஆளுமைகளுள் முக்கிய ஒருவரான கமலாதேவி இம்மானுவல் கமலநாதன் தனது 80 ஆவது வயதில் அண்மையில் எமை விட்டுப்பிரிந்தார். எங்கள் அனைவராலும் கமலா அக்கா என வாய்நிறைய நெஞ்சு நிறைய அழைக்கப்பட்டவர் இந்த கமலா அக்கா 80 வயது வாழ்ந்தநிறைவான வாழ்வுடையவர் அவர். அவர் மரணம் எதிர்பார்த்ததே எனினும் அவர் பிரிவு மனதை மலைபோல அழுத்துகிறதே. தன் பிரிவினால் எம் மனதை மிக மிக வருத்துகிறாரே இந்த கமலா அக்கா
யார் இந்தக் கமலா அக்கா?
பெரியகல்லாறு எனும் கிராமத்தில் ஐயாக்குட்டி தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக 1940 இல் தோற்றம்.

கல்வித் தகுதி

அன்றைய ஜே.எஸ்.ஸி வகுப்புவரை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில் கல்வி;
எ,எஸ்ஸி என அழைக்கப்பட்ட சாதாரண தர வகுப்பு. திரிகோண்மலை புனித மரியாள்கல்லூரியில். கல்வி
எச் எஸ் ஸி என அன்று அழைக்கப்பட்ட உயர்தர வகுப்பு கல்வி சென்ட் மைக்கல் கல்லூரியில்
பேராதனைப் பல்கலைக்ழகத்தில் பீ.ஏ பட்டம்.
கொழும்பு பல்கலைக்ழகத்தில் பட்டபின் படிப்பு கல்வி டிப்ளோமா பட்டம்
பின்னர் எஸ் எல் ஏ சியில் கல்வி நிர்வாகிகளுக்கான தேர்வில் தேறினார்

அவரது கல்வித்தகமைகள் இவை
அக்காலகட்டத்தில் 1960 களில் இவை பெரிய பட்டங்கள்.அதிலும் ஓர் பெண் பெற்ற பட்டங்கள்

முதலில் கண்டமை

அவரை அவரது இளம் வயதில் மட்டக்களப்பு ஸ்ரேசன் றோட்டில் முதன் முறை கண்டமை ஞாபகம் வருகிறது. அது எப்போது?
1961இல் என நினைக்கிறேன். இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன்னர்.அவர் திருமணம் செய்து ஓராண்டுகளின் பின்
மலர்ந்த முகம்
அழகான வாக்குக் கண்
வெள்ளை நிறம்
சிறிய சிரிப்பு
அனைவரையும் வரவேற்கும் உள்ளம்
அழகான தோற்றம் அகம் காட்டும் தோற்றம்
இப்படித்தான் எனக்கு அவர் அறிமுகமானார்
அக்கா
அவரது கணவர் வித்துவான் கமலநாதன் அதற்குமுன்னரேயே எமக்கு அறிமுகம். வித்துவான் கமலநாதன் அன்றைய தமிழ் இளைஞர்களின் ஓர் ஆதர்சப் பேச்சாளர். தந்தை செல்வா என அழைக்கபடும் ச. ஜே வே செல்வநாயகம் அவர்கள் மட்டக்களாப்பில் நடக்கும் தமிழரசுக்கடசிக் கூட்டத்திற்கு வந்தால் வித்துவான் கமலநாதன் பேச்சை விரும்பிக் கேட்பாராம். சொற்களை அழுத்தி இலக்கிய நயத்தோடு பேசும் கமலநாதன் பேச்சில் தமிழுணர்ச்சி கரைபுரண்டோடும். பாரதிதாசனின் கவிதை வரிகள் அருவியாய் ஓடும் .
சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரைக்கு அடுத்து மக்கள் விரும்பிக்கேட்பது கமலநாதனின் பேச்சைத்தான். இவர் இன்னுமோர் சொல்லின் செல்வர். இவரது தமிழில் மயங்கியோர் பலர் ஆளும் அழகானவர். தீவிர தமிழுணர்வாளர்

கமலநாதன் அரசியல்செயல் பாடுகள்

1958 களில் மட்டக்களப்புக் கச்சேரியை சுற்றி வளைத்து இயங்காமல் ஆக்கினர் தமிழரசுக்க்ட்சியின. ர் அதில் பொது மக்கள் அலை அலையாக கலந்துகொண்டனர் மட்டக்களப்புக் கச்சேரியை இயங்கவிடாது இரவும் பகலும் சுறி அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினர். , வடக்கும் கிழக்கும் ஸ்தம்பித்து விட்டது அரசு இயந்திரம் இயங்கமுடியவில்லை. அது தமிழ் மக்களின் அன்றைய எழுச்சி. அதில் தீவிரமாக இயங்கியவர் கமலநாதன்,
ஓர் நாள் அவ்வெழுச்சி விடியற்பொழுதில் பொழுது புலரும் முன் இராணுவத்தால் அடக்கப்பட்டது.
சத்தியாக்கிரகிகள் அடித்து விரட்டப்பட்டனர். சத்தியாக்கிரகிகளை பலவந்தமாகத் தூக்கிசென்றனர் இராணுவத்தினர்
மறு நாள் ஊரடங்கு உத்தரவு அதனையும் மீறி தன்னந்தனியனாய் ஓர் கறுப்புகொடிதாங்கி இராணுவத்தினரைப் பொருட்படுத்தாது நடந்து சென்று பொலீஸாரால் அடிவாங்கி ஓர் காணுக்குள் தூக்கி வீசப்ப்பட்டவர் இந்தக் கமலநாதன் எனவும் கேள்விப்பட்டுள்ளேன்
அப்படியொரு மஹா துணிச்சல்காரர் அவர்
அழகும் துணிவும் அறிவும் மிகுந்த அவரைக்கண்டு மயங்காதோர் யார்?
மயங்கியவர்களுள் ஒருவர் கமலா அக்கா. சென்ட் மைக்கல் கல்லூரியில் கமலா அக்காவின் தமிழாசிரியர் வித்வான் கமலநாதன்
கமலா அக்கா மாணவப் பருவத்தில் ஓர் எழுத்தாளி சிறுகதை ஆசிரியர் பேச்சாளி அத்தோடு நாடக ஈடுபாடும் மிக்கவர், ஓர் பிரத்தியேக திறன்கள் மிகுந்த சுறு சுறுப்பான மாணவி அக்காவின் எழுத்து வன்மையும் பேச்சு வன்மையும் துரு துருப்பும் ஆசிரியரான கமலநாதனைக் கவர்ந்தன
கமலநாதனின் கற்பித்தல் முறை அக்காவைக் கவர்ந்தன
காதலித்தனர் . இருவரும் கரம் பிடித்தனர்
அவரை கமலா அக்காகரம் தொட்ட காலம் இருந்து அவர் கணவன் இறக்கும் வரை வித்வான் கமலநாதனை உள்நின்றியக்கும் சக்தியானார் கமலா அக்கா
தானும் இயங்கினார்தன் கணவரையும் இயக்கினார்
அந்தச் சக்தி இன்றி இந்தச்சிவன் இயங்கியிராது என்பதை அவர்களோடு நெருங்கிப் பழ்கிய நாமே அறிவோம்அந்தச்சக்தியின்பலத்தால்கமலனாதன்ஆற்றியபணிகள் அளப்ப்பரியன
அவைதனியாகஎழுதப்பட வேண்டியவை

கமலநாதன் கமலாவதி தம்பதியினர்

கமலநாதனும் கமலாவும் தம்பதிகளானார்கள்.
மட்டுநகரே அவ்விணைப்பால் மகிழ்ந்தது இருவரும் இளையவர்களாய் மட்டுநகரை வலம் வந்தார்கள்.
கமலம் என்றால் தாமரை ஒரு தாமரையே மணம் வீசியபடி தான்இருக்கும் இடத்தை அழகுறச்செய்யும் புனிதமாக்கும் மனம் நிறைக்கும் மிகு மணம் வீசும்
இங்கே இரு தாமரைகள் கமலங்கள் இணைந்தன. இதனால் பலன் அடைந்தது மட்டுநகரே
ஒரு கமலமான கமலநாதன் காற்குடாவைசேர்ந்தவர், மற்றக்கமலமான கமலா அக்கா கல்லாற்றைசேர்ந்தவர்
தம் செயல்களால் இவர்கள் இருவரும் மட்டுநகரின் புகழை பிறர் அறிய வைத்தார்கள் மட்டுநகரின் மதிப்பிற்குரியவர்களானார்கள்
அன்றைய இளைஞர்களின் முக்கியமாக இளம் காதலர்களின் இலட்சியத் தம்பதிகளும் ஆனார்கள்
நேர்மை உண்மை அஞ்சாமை பணிவு மற்றவர் மீது அன்பு,அனைவரையும் சமமாக மதிக்கும் சமத்துவப்பண்பு மட்டக்களப்பு மண்மீதும் அதன் கலைகள் மீதும் மாளாத காதல், தமிழ்ப்பற்று சமூக சேவை என்பன இருவரிடமும் காணப்பட்டமை இவர்களை இலட்சிய தம்பதிகளாகக் காட்டின
இருவரும் நான் அறிய சென்ட் மைக்கல் கல்லூரியில் தமிழ் கற்பித்துகொண்டிருந்தனர்
இருவரும் மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லுரியில் தமிழ் வளர பெரிதும் உழைத்தனர்
இலட்சியத் தம்பதிகள் இருவரும் மாண்வர்களின் பெரும் மதிப்பிற்குரியோராயும் இருந்தனர்
நாங்கள் பல்கலைக்ழகம் சென்றவேளை 1961 இல் எம்மை ஆசிகூறி வழியனுப்பி வைத்தவர்கள் இத்தம்பதியினர், அன்று மட்டுநகரிலிருந்து பல்கலைக்ழகம் செல்வது வருடம் தோறும் ஓரிருவரே

கூத்து புனருத்தாரணமும் கமலாஅக்காவின் பங்களிப்பும்

1960 தொடக்கம் 1970 வரை பேராதனைப் பல்கலைக்க்ழகத்தை மையமாககொண்டு ஓர் கூத்துப் புனருத்தாரணம் நடந்தேறியது. அதில் தலை மகனாக நின்றவர் பேராசிரியர் வித்தியானந்தன். மட்டக்களப்பில் அது மையம்கொண்டபோது அவருக்குபக்கபலமாக நின்றவர்கள் அன்றைய மட்டுநகர் அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையாவும் வித்வான் வி,சீ கந்தையா புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைஅவரிடம் கற்ற கமலநாதனும் ஆவர்
..வித்தியானந்தன் கூத்து ஏடுகள் தேடியும் மக்கள் பாடலான நாட்டார் பாடல்தேடியும் அண்ணாவிமார் தேடியும் மட்டக்களப்பு வந்த காலங்கள் அவை
அவருக்கு மட்டக்களப்பில் நிற்க எத்தனயோ அதி வசதியான இடங்கள் இருந்தாலும் அவற்றை தவிர்த்த அவர் வித்துவான் கமலநாதன் வீட்டிலேயே தங்குவார்.
அடையா நெடுங்கதவும் அனைவரையும் வரவேற்கும் பண்புகொண்டது அந்த இல்ல்லம். . அக்காவின் அன்பும் உபசரிப்பும் அனைவரையும் கட்டிப்போட்டுவிடும் அக்காவின் மட்டக்களப்பு இறால் சொதி வித்தியானந்தனையும் கட்டிப் போட்டுவிட்டது
ருசித்து ருசித்து அருமை அருமை என்று கூறிச் சாப்பிடுவார். நாமும் உடன் இணைந்து அவர் உணவை ருசிப்போம்அக்காவின் அன்பு மழையில் நனைவோம்
வித்தியானந்தனுக்கு அக்கா மிக விருப்பத்திற்குரிய ஒரு மகளும் ஆனார்.. வித்தியானந்தன் அடிக்கடி கமலா அக்காவைத் தன் மகள் என்றே கூறுவார்
இல, 8 ஸ்டேசன் றோட்டில் இருந்த அக்காவின் அந்த வீட்டிலேதான். மட்டக்களப்பு அண்ணாவிமார் பெரும் பாலோர் அன்று திரண்டனர்
1960 களில் பேராதனையில் கூத்து செய்ய வித்தியானந்தனுக்கு சிறந்த ஓர் அண்ணாவியார் தேவைப்பட்டார்,.அண்ணாவிமாருக்கு ஓர் தேர்வு நடந்தது. அந்த தேர்வு அக்காவின் இந்த வீட்டிலேதான் நடந்தது
அன்று அந்த கிராமப்புற அண்ணாவிமார் அக்காவின் கையால் உணவுண்டு மகிழ்ந்து புகழ்ந்து அவ்விளம் பெண்ணை வாழ்த்திசென்றமை இப்போதும் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துள்ளது
1965 இல் நான் பட்டப்படிப்பை முடித்து ஊர் வந்தபோது சில காலம் உயர்தர வ்குப்புக்கு தமிழ் கற்பிக்க ஒழுங்கு செய்திருந்தார் கமலநாதன் இவ்வகையில் என்னையும் சென்ட் மைக்கல் உள்ளீர்த்துகொண்டது
நானும் சில காலம் அங்கு ஓர் ஆசிரியரானேன்

சென்ட் மைக்கல் கல்லூரியும் கமலா அக்காவும்

பின்னர் வித்துவான் கமலநாதன் புனித மைக்கல் கல்லூரி அதிபரானார். அவர் காலத்தில் அங்கு உப அதிபராகப் பணிபுரிந்தார் கமலா அக்கா, கணவர் ஓய்வு பெற அப்பாரிய பொறுப்பு அக்கா தலையில் விழுந்தது. பாரம்பரியம் மிக்க ஆண்கள் பாடசாலை அது.இதுவரை ஆண்களே அதிபர்களாக இருந்த பாடசாலை அது
அத்தனை பேரும் மிக மிக ஆளுமையுள்ள அதிபர்கள்
பெண்ணான அக்கா அதிபராகப் பணி ஏற்றார். ஓர் பெண், வேகமும் விவேகமும் துடிப்பும் மிக்க இந்த ஆண்பிள்ளைகளை கையாளுவாரா? என்ற சந்தேகம் பலரிடைநிலவியது>மிகக் கடினமான பணி. திமிறி நிற்கும் இளம் ஆண் காளைகளை ஒழுங்குக்குள் கொணரும் பாரிய பணி
அனைத்து ஆண் மாணவர்களையும் தன் அன்பினாலும் கண்டிப்பினாலும் செயற்பாடுகளினாலும் கட்டுப்பாட்டுள் கொணர்ந்தார் அக்கா
அக்கா அதிபராகப் பணியேற்ற காலம் மிக மிக நெருக்கடியானகாலமும் கூட. தமிழ் இளைஞர்களைத் தேடி இராணுவமும் பொலீஸும் திரிந்த காலம், புலனாய்வாளர் தமிழ் இளைஞரை மோப்பம் பிடித்து திரிந்த காலம். துடிப்பும் வேகமும் மிகு உணர்ச்சியும் கொண்ட சென்ட் மைக்கெல் மாண்வர்களைத் தாய்க்கோழி தன் சிறகுக்குள் வைத்து பருந்துகளிடம் இருந்து பாதுகாப்பது போல அவர் பாதுகாத்தார். எத்தனையோ சவால்களை அவர் சந்தித்தார். தந்திரோபாயங்களைக் கையாண்டார் துணிவோடு பல படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்
கதை கதையாக இவற்றை எனக்கு அக்கா கூறியுள்ளர். அவர் துணிவான செயல்கள் எனக்கு பெரும் வியப்பளித்தன. ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் உதவியும் ஆதரவும் இவருக்கு அன்று பெரிதும் கிடைத்தன
இக்காலகட்டத்திலேதான் நானும் யாழ்பாணத்திலிருந்து மாற்றலாகி கிழக்கு பல்கலைகக்ழகத்துடன் இணைந்து கொண்டேன்
20 வருடங்களுக்குப் பிறகு தாய் மண்ணில் வாழ நான் வந்திருந்தேன் நிலைமைகளும் புதிய தலை முறையும் எனக்கு புதிது. கமலநாதன் சேரின் ஆதரவும் உதவியும் அக்காவின் ஆதரவும் உதவியும் எனக்கு பெரும் உதவியாக இருந்தன,அவர்கள் இருவரும் மட்டக்களப்பில் என் பெரும் கவசங்களாயினர்
பலரை அறிமுகம் செய்து வைத்தனர். 1970 களில் புறப்பட்ட நான் 20 வருடங்கள் கழித்து தாய்மண் திரும்பியுள்ளேன். எல்லாமே எனக்கு புதிது. அக்காவும் அவர் கணவரும் மட்டக்களப்பில் எனக்கு பலரை அறிமுகம் செய்து வைத்தனர் முக்கியமாக ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் மிக நெருக்கமான உறவு
அப்போது நான் கிழக்குபலகலைக்ழக பீடாதிபதியாக இருந்தேன் பல்கலைக்கழகத்தையும் சமூகத்தையும் இணைப்பதில் இருவரும் ஓர் இணைப்புச் சங்கிலியாக இருந்தார்கள்
அன்று மட்டக்களப்பில் வாழ்ந்த அனைவரும் தினமும் காலையும் மதியமும் ஓர் காட்சி காண்பர்
அதுதான் ஓர் கட்டையான நடுத்தர வயதுள்ள ஓர் பெண் வெயிலுக்காக குடையைப்பிடித்துகொண்டு அசைந்து அசைந்து தாண்டவன் வெளியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்த் சென் மைக்கல் கல்லூரிக்குச் செல்லும் காட்சி
அதே மக்கள் பிற்பகல் 2.00 அல்லது மூன்று மணிக்கு இன்னொரு காட்சி காண்பர். அதுதான் அதே பெண் அந்த வெயிலுக்குள் அல்லது மழைக்குள் அதே குடையைப்பிடித்தபடி அசைந்து அசைந்து அந்த திரிகோண்மலை வீதியில் சென்ட் மைக்கலில் இருந்து தாண்டவன் வெளி வரும் காட்சி.
எந்த வித பந்தாவும் இல்லாமல் அந்த கர்ம யோகினி நடந்து வருவார்
அவரே சென் மைக்கல் கல்லூரி அதிபரான இந்தக் கமலா அக்கா
1991 ஆம் ஆண்டு சென்ட் மைக்கல் கல்லூரியில் ஓர் சிறுவர் நாடகம் ப்ழக்க அழைத்தார் கல்லூரி அதிபரான கமலா அக்கா
வேடனை உச்சிய வெள்ளைபுறாக்கள் அந்நாடகம் சார்ள்ஸ் மண்டபத்தில் மேடையேறியது. அடுத்த வருடம் ஒரு முயலின் கதை எனும் சிறுவர் நாடகம் மேடையிட அக்கா ஒழுங்குகள் செய்து தந்தார்
அங்கு எனக்கு பல சிறுவர்கள் அறிமுகமாகினர் மாமா என அழைத்தனர் அனைவரும் இன்று மிக உயர் நிலைகளில் உள்ளனர். உலகமெங்கும் பரந்தும் வாழ்கின்றனர் மாமா உறவு தொடர்கிறது பல மருமக்களை எனக்களித்த இந்த அகாவின் இழப்பு எனக்கு மிகுந்த பாரம்தரும்தானே
அவரது காலத்தில் சென் மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலை ஆனது, நூற்றுகணக்கான மாணவரைப் பல்கலைக்ழகம் அனுப்பியது பல தேசிய போட்டிகளில் வெற்றியீட்டியது விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கிண்ணகள் ஈட்டியது கலை நிகழ்வுகள் பல நிகழ்ந்தன ஒரு வகையில் அது சென்ட் மைக்கலின் பொற்காலம், அர்ப்பணிப்பான அக்காவின் தலைமைத்துவமும் அதற்கு ஓர் காரணம்

கிழக்குபல்கலைக்கழக பேரவை உறுப்பினர்

2005இல் அவர் திறமைகள் அவரைக் கிழக்குப்பல்கலைக்ழக பேரவை உறுப்பினராகின, வெளியிலிருந்து பேரவை உறுபினராக பல்கலைக்ழக பேரவை உறுப்பினராக நியமிகப்பட்ட ஒரே ஒரு மட்டக்களப்பு பெண் உறுப்பினர் இவர் என்றே கருதுகிறேன். வயது சென்ற அவர் தூக்கமுடியாத தனது உடலைத் தூக்கியபடி அந்த மாடிபடிகளில் ஏறிவருவது கண்முன் தோன்றுகிறது அவரது அனுபவ ஆலோசனைகள் கிழக்குப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பெரிதும் உதவின
ஓய்வு பெற்றபின் கணவனும் மனைவியும் ஓய்ந்திருக்கவேயில்லை அவர்கள் இருவரும் சேர்ந்து பெரும் தமிழ்ப்பணியில் ஈடு பட்டனர்.

ஏட்டிலிருந்து அச்சுக்கு

மட்டக்களப்பின் வரலாறு, சமயம் இலக்கியம் கலைகளை வெளிகொணர்வதில் அக்கறை காட்டினர், ஓய்வின் பின்னும் ஓயாத தம்பதியினர் அவர்கள் முயற்சிகளில் ஒன்று மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எனும் நூலை ஏட்டிலிருந்து அச்சு வாகனம் ஏற்றும் முயற்சியாகும்
. அதற்காக அக்காஓலையில் எழுதிய குத்துகள் வைக்காத தமிழ் எழுத்துகளை வாசிக்கும் பயிற்சி பெற்றார் இரவு வேளைகளில் அவர்களது வீட்டின் முன் ஹாலில் அந்த மேசியின் மீது மின்சார விளக்கின் கீழ் அவர் அமர்ந்திருந்து கொவ்வை இலையால் ஏடுகளைத் தடவித் தடவி தெளிவாக்கி அந்த ஏட்டெழுத்துகளை உன்னிப்பாகப் பார்த்துப்பார்த்துஇன்னொரு கொப்பியில்எழுதிகொண்டிருந்த காட்சி ஞாபகம் வருகிறது .அவரது கடுமையான உழைப்பின் பெறுபேறுதான் மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் எனும் மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு கூறும் நூல்
. இது ஒரு வகையில் கிழக்கு மாகாணத்தின் மஹாவம்சம் எனலாம்
ஆவரது இன்னொரு பணி பாரத அம்மானை ஆகும் ,இதுவும் ஏட்டுவடிவிலிருந்ததோர் நூலாகும். இதுவும் அக்காவினால் ஏட்டிலிருந்து பார்த்து பார்த்து கொப்பியில் எழுதப்பட்ட நூலாகும். அக்காவும் மோர் கத்தோலிக்கர் எனினும் திரௌபதை அம்மன் வரலாறுகூறும் பாரத அம்மானையை தன் மத நம்பிக்கைக்கும் அப்பால் சென்று உழைத்து மட ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்க மூல காரணமானார்
இப்பணியை கணவனும் மனைவியும் இணைந்து செய்தனர்.
ஓய்வின் பின் என்ன செய்யவேண்டும் என்பதற்கு நமக்கு முன்னுதாரணமும் ஆகினர். முக்கியமாக ஓய்வுபெறும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கற்க வேண்டிய பண்பு இது
இவை அனைத்தையும் அச்சிக்குக் கொணர தன் முழு உழைப்பையும் தன் கணவருக்கு வழங்கினார் அக்கா
அக்கா கமலநாதன் சேருக்குக் கிடைத்த பெரும் சொத்து
அக்காலகட்டங்களில் அவரகல் ் வீடு செல்கையில் எமது பேச்செல்லாம் இந்த அச்சுபணி ஏடு வாசிப்பு அதனை வாசிக்கும் முறை கஸ்டம் அதனால் வரும் கண்பிரச்சனைகள் பற்றியனவாகவே இருக்கும்
அவரது இன்னொரு பணி சுவாமிவிபுலானந்தரின் முழு ஆக்கங்களையும் அச்சில் கொண்ர இலக்கிய கலநிதிகள் என கிழக்குப் பல்கலைக்ழகத் தால் பட்டம் வழங்கப்பட்ட வித்துவான் கமலநாதனுடனும் ஆசிரிய மணி சிவசுப்பிரமணியத்துடனும் இணைந்து சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள் அவர் பற்றிய விபரங்கள் அவர் எழுதிய கவிதைகள் தேடி நூல் நிலையங்களிலும் தேசிய சுவடி நிலையத்திற்கும் அலைந்தமையும் பதிப்பிற்கு தனது கடும் உழைப்பை நல்கியமையும் ஆகும்.சுவாமி விபுலானந்தரின் மிகபெரும்பாலானா ஆக்கங்கள் பல தொகுதிகளாக அன்று வெளி வந்தன.அக்கா இதன் பின்னின்று இயக்கிய சக்தி
தான் இயக்கிய கணவர் கமலநாதன் இயங்க முடியாத நிலை அடைந்தபோது அவரை ஓர் குழந்தைபோல பரமரித்தவர் அக்கா.
மனைவி தாயான கதை அது
கணவர் கமலநாதன்இறப்பின்பின்அவர்தனித்துபோனார். அன்றில்பறவையில்பெண்பறவைதனித்துப்போனது
கமலநாதன்இல்லாவாழ்வுஅவருக்குச்சுவைதரவில்லை.
எனினும்அவர்வாழ்ந்தார்
தன்பணிகளைத்தொடர்ந்தார்
நானும்என்மனைவியும்அடிக்கடிசென்று அவரோடு உரையாடி
வருவோம்
இக்கொடியகொரோணாவினால்அவரைச்சென்றஆண்டுதைமாதத்தின்பின்சந்திக்கும்வாய்ப்புக்கிடைக்கவில்லை
சந்தித்து ஒரு வருடமாகி விட்டது
கடைக்குட்டிமகன் தேவநம்பி இன்னொருகமலநாதனாகமாறிஅவரைக்கவனித்துகொண்டான்
அவனதுமனைவியும்அவருக்குஇன்னொருமகளாகநின்றுகவனித்தார்
பேரப் பிள்ளைகள் அவருக்கு மகிழ்வளித்தனர். வெளியே செல்ல உடல் நிலை இடம் தரவில்லை. நடந்து திரிந்த அவர் கால்கள் வீட்டுக்குள் ஒடுங்கி விட்டன
அவரதுஇறுதிக்காலங்கள்பழையநினைவுகளிலும்இறைவழிபாட்டிலும்கழிந்தன

கமலா அக்கா விட்டுச்சென்ற எச்சங்கள்

இத்தாய்க்கு ஐந்து பிள்ளைகள் அவர்கள்

காயத்ரி கட்டிடக் கலைஞர் இப்போது கனடாவில் வதிகிறார்
அடுத்தவர் பகீரதி பீ கொம் பட்டதாரி இப்போது அமெரிக்காவில் வதிகிறார்
அடுத்தவர் கலாபாரதி எஞ்சினீயர் இப்போது கனடாவில் வதிகிறார்
அதற்கு அடுத்தவர் திரு நம்பி எஞ்சீனியர் இப்போது அவுஸ்திரேலியாவில்
கடைக்குட்டி தேவ நம்பி எஞ்சீனியர் இப்போது மட்டக்களப்பில் திறந்த பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறார்
அதனை விட அவர் ஒருவரை வளர்ப்பு மகனாகவும் வளர்த்து வந்தார்,
இவர்களை சிறு வயது முதல் கொண்டு இன்று வரை நான் அறிவேன். அனைவரும் தந்தை தாயாரின் குணப்பண்புகள் கொண்டவர்கள். சிலர் எழுத்து, பேச்சு, இசை வாத்தியம் என்பனவற்றில் ஈடுபாடு மிக்கவர்கள் தமிழ் உணர்வாளர்கள் பண்பாளர்கள். அனைவரும் சமூக சேவையாளர்கள்
தாய்போல அனைவரையும் அணைக்கும் அனைவர்க்கும் உதவும் பண்பினர்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் என்பது
வள்ளுவர் குறள்

மனிதர்கள் தக்கவரா அதாவது தகுதியுடைவரா அல்லாத பண்புடையவரா? என்பது அவரவர் விட்டுசெல்லும் பிள்ளைகளால் தெரிய வரும் என எச்சம் என்பதற்கு உரை கூறுவார் பரிமேலழகர்
ஆனால் நவீன திருக்குறள் உரைகாரர் எச்சம் என்பதற்கு அவரவர் செய்த செயல்கள் என பொருள் கூறுவர்
அக்காவைப்பொறுத்தவரை இவ்விரண்டு உரைகளும் பொருந்தும் ர
அக்கா விட்டுசென்ற எச்சங்கள் அவரது சமூக சேவை இலக்கிய சேவை கல்விசேவை செயல்களும்
அவரது அருமையான் பிள்ளைகளும் ஆகும்
இவ் எச்சங்களால் அவர் தக்கார் ஆகிறார்
தக்கார் ஆன கமலா அக்கவின் வாழ்வைக் கொண்டாடுவோம். அவர் செயல்களிலிருந்து பாடம் கற்போம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More