சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசஆ மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போதுஅவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #சிறைத்தண்டனை #சசிகலா #விடுதலை