இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தினர் மூவருக்கும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #தடுப்பூசி #இலங்கை #ஒக்ஸ்போர்ட் #ஐடிஎச்வைத்தியசாலை