முல்லைத்தீவில் நேற்றையதினம் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முள்ளியாவலை காவல்நிலையத்தின் 592 வது பிரிகேட் மற்றும் 9 வது கள பொறியியல் பிரிவு என்பன கூட்டாக இணைந்து 152 மி.மீ அளவான 110 பீரங்கி குண்டுகள், 122 மி.மீ அளவான முப்பத்தாறு பீரங்கி குண்டுகள், நாற்பத்தொன்பது 152 மிமீ பீரங்கி குண்டுகள , 122 மி.மீ குண்டுகள், 10 பியூஸ்கள் என்பவற்றை மீட்டுள்ளனா் .
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை (25) இடம்பெற்றிருந்த நிலையில், அவசியமான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் புதைக்கப்பட்ட குண்டுகளை தோண்டி எடுப்பதற்கு படையினருக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினா் விடுத்த கோாிக்கைக்கமைய அவற்றினை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
குறித்த வெடிபொருட்கள் 2009 ஆண்டுக்கு முன்பாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. #முல்லைத்தீவில் #வெடிபொருட்கள் #மீட்பு