டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் தங்கியிருந்த கூடாரத்திற்கு கற்களை வீசி சேதப்படுத்திய இனந்தொியாத நபர்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி- ஹரியானா எல்லையிலுள்ள சிங்கு பகுதியில் கடந்த இரண்டு மாதமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அங்கேயே கூடாரங்களை அமைத்து அங்கு தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர் .
இந்நிலையில், இன்று மதியம் சிங்கு பகுதியிலுள்ள விவசாயிகள் போராட்ட களத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 200 இனந்தொியாத நபர்கள் அப்பகுதியில் திரண்டு விவசாயிகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் சிங்கு பகுதியில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வன்முறையில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை யைத் தொடா்ந்து அங்கு முதலே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் திக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்க்க அதிகளவில் காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #விவசாயிகள்_போராட்டம் #வன்முறை #கூடாரங்கள் #கண்ணீர்புகை #குண்டுவீச்சு