இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணை வேந்தராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் கிழக்கிலங்கையில் செயற்படுகின்ற ஆய்வறிவுத்துறை சார்ந்த செயற்பாட்டு ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கி வருகின்றார். விசேடமாகஇ கிழக்குப்பல்கலைக் கழகத்தின் கடந்த மூன்று
தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றுப் பாதையில் ஆர்ப்பாட்டங்களின்றி கனதியான தாக்கங்களைச் செலுத்தியுள்ள ஓர் ஆக்கபூர்வமான ஆளுமையாக உள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறையில் விரிவுரையாளராக, துறைத்தலைவராக, பீடாதிபதியாக, துறை சார்ந்து பல பணிகளையாற்றிய இவர், கிழக்குப்பல்கலைக்கழகத்தின்
திருகோணமலை வளாகத்தின் முதலாவது தலைவராகவும் கடமையாற்றியவர். எட்டுப் பீடங்களையும், ஒரு வளாகத்தையும், ஒரு அழகியற் கற்கைகள் நிறுவகத்தையும், பத்திற்கும்
மேற்பட்ட அலகுகளையும் கொண்ட கிழக்குப பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் எனும் பொறுப்பு வாய்ந்த பதவியை ஏற்று தனது சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக குறித்த
பதவியினை அலங்கரித்தவர்.
தான் சார்ந்த துறையில் ஒரு நிபுணராகத் தன்னை உயர்த்திக் கொண்ட இவர் நேர்மையான, துணிகரம் மிக்க நிருவாகியாகவும், தலைவராகவும், முகாமையாளராகவும் தனது பணிகள்
ஊடாகத் தன்னை வெளிக்காட்டி நிரூபித்து வந்துள்ளார்.
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்களின் பேராளுமை என்பது, அவர் தானுண்டு, தன் பாடுண்டு எனும் வரையறைகளுக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு வாழாதிருத்தலேயாகும். அதாவது தனது துறை சார்ந்த செயற்பாடுகளுடன் மட்டும் தன்னைக்
குறுக்கிக் கொள்ளாமல் கிழக்கின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் மிக முக்கியமானதும், ஆக்கபூர்வமானதுமான தாக்கங்களைச் செலுத்தி வரும்
நபராக விளங்கி வருகின்றமையே ஆகும். குறிப்பாக, ஓர் ஆய்வறிவாளராக சமூகத்தின் யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ற விதமாகத் தனது நிபுணத்துவ ஆற்றல்களைப்
பிரயோகிக்கும் நடைமுறைச் செயற்பாட்டாளராக இவர் இயங்கி வருகின்றமை இவரின் முக்கியத்துவத்தினை வெளிக்காட்டி நிற்கின்றது எனலாம்.
துணைவேந்தராக ஆற்றியுள்ள பணிகள்…
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியினை ஏற்றதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பௌதீக கட்டமைப்புக்களின் விருத்திக்காக ஏறத்தாழ 3146 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள்
கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன: ஆங்கில மொழிக் கற்கைகள் அலகின் அபிவிருத்திக்காக 208 மில்லியன், தொழில்நுட்ப பீடத்தின் விருத்திக்காக 208 மில்லியன், உத்தியோகத்தர் விடுதி வசதிகளுக்காக 32 மில்லியன், விவசாய
பீடத்தின் அபிவிருத்திக்காக 303 மில்லியன்ரூபவ் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் அபிவிருத்திக்காக 120 மில்லியன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் அபிவிருத்திக்காக 275 மில்லியன்ரூபவ் திருகோணமலை வளாகத்தின்
அபிவிருத்திக்காக 2000 மில்லியன் என மொத்தம் 3146 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிடைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஆளணியில் புதிதாக 70 இற்கும் மேற்பட்ட நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் கல்விசார் ஆளணியினரில் 50 இற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். கல்வி சாரா
ஆளணியில் புதிதாக 121 நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், 56 பேர் பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்களின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
கல்விகற்கும் மாணவர்கள் தமது உயர்கல்வித்துறையினை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்ரூபவ் மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் என்பவற்றுடனும், தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்துடனும்
ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய மூன்று வருட காலப்பணியில் அதிகளவான பேராசிரியர்கள் பதவியுயர்வினைப் பெற்றுள்ளதுடன் கலாநிதிக்
கற்கைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்கலையில் புதிய கற்கைகளுக்கான ஏற்பாடுகள்…
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் கிழக்கின் பண்பாட்டம்சங்களின் எதிர்கால விருத்தியைக் கருத்திற் கொண்டு தூர நோக்குடன் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் எதிர்காலத்தில் மேலும் புதிய கற்கைகளுக்கான முன் ஏற்பாடுகளைத் திட்டமிட்டு
உருவாக்கியுள்ளமை அவருடைய காலத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள மிக முக்கியமான பணியாக உள்ளது. அதன்படி எதிர்காலத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சட்ட பீடம்ரூபவ்
வாவிக் கற்கைகளுக்கான பீடம்ரூபவ் இந்துகலாசார பீடம்ரூபவ் பால்பண்ணை விஞ்ஞான பீடம்ரூபவ் கடலாய்வு கற்கைகள் பீடம் என புதிதாக ஐந்து பீடங்களும்ரூபவ் சமதானக் கற்கைகளுக்கான
நிலையம் ஒன்றும்ரூபவ் பொறியியல் தொழில்நுட்பத் துறைரூபவ் தமிழ் கற்கைகளுக்கான துறை என இரண்டு புதிய துறைகளும் ஏற்படுத்தப்படுவதற்கான உறுதியான அத்திவாரங்கள்
இடப்பட்டுள்ளன.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற வகையில் மட்டக்களப்பிலுள்ள அரச காணிகளிலிருந்து பல்கலைக் கழகத்திற்கென பல ஏக்கர் காணிகள் பெறப்பட்டுள்ளதுடன், மேலும் சில காணிகள் வழங்கப்படுவதற்கான உத்தரவாதமும் கிடைக்கப்பெற்றுள்ளது. உதாரணமாக விவசாய பீடத்துக்கென களுவன்கேணி பலாச்சோலையில் 60 ஏக்கர் நிலம்,
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விஸ்தரிப்பிற்காக பூநொச்சிமுனையில் 05 ஏக்கர் காணி, புதிதாக உருவாக்கப்படவுள்ள சமாதானக் கற்கைகள நிலையத்திற்காக முறக்கொட்டான் சேனையில் 17 ஏக்கர் காணிரூபவ் தாவரவியல் துறைக்கென ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலவணரூபவ் சிவத்தப்பாலம் ஆகிய பகுதியிலிருந்து 100 ஏக்கர் நிலம், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக கரடியனாறு பகுதியிலிருந்து 50 ஏக்கர் காணி, பல்கலைக் கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக கிரிமிச்சையில் 150 ஏக்கர் நிலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுடன் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பால்பண்ணைக் கற்கைகளுக்கான பீடத்துக்கென உன்னிச்சையில் 25 ஏக்கர் காணியும் இனங்காணப்பட்டு அதனையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் இவருடைய முயற்சியினால் மேற் கொள்ளப்பட்டன.
இவற்றுடன் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் உபவேந்தராகிய பின்னரே மூன்று தசாப்தங்களையும் கடந்த வரலாற்றினைக் கொண்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை
வளாகத்திற்கு உரிய காணி உறுதி பெறப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறு கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள் பொறுப்பு வாய்ந்த உபவேந்தர் எனும் வகையில் தூர நோக்குடன் கிழக்கின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலமைகளுக்கேற்ற வகையில் அமைதியாக உயர்
கல்வியின் விருத்திக்கான நடவடிக்கைளையும்ரூபவ் அதற்குரிய விதமான பௌதீக, மனிதவள விருத்திக்கான பணிகளையும் தனது ஆளுமையூடாக மேற்கொண்டுள்ளார். மேற்படி பல்கலைக்கழகம் சார்ந்த சேவைகளுடன் பேராசிரியரின் சமூகம் சார்ந்த பணிகளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமானவையாக உள்ளன. அந்த வகையில்
1990களில் குரலற்ற மக்களின் குரலாக…
1990 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் வரலாற்றில் மிகவும் சிக்கலான காலப்பகுதியாகக் காணப்பட்டது. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களிடையே இழையோடிக் கொண்டிருந்த ஐக்கியத்தைக் குலைக்கும் வகையிலான இனக்குரோதம் திட்டமிட்டு
உருவாக்கப்பட்டிருந்தது. இனங்களுக்கிடையிலே குரோதமும்ரூபவ் பழிவாங்கும் மனோ நிலையும் அதி உச்ச கொதி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த அசாதாரண நிலைமையில் சில கிராமங்களில் வாழ்ந்த மக்கள் முற்றாகக் குடிபெயரும் நிலைமை
அதிகரித்திருந்தது.
சொந்த மாவட்டத்திலேயே மக்கள் அகதிகளாக அலைக்கழிந்தார்கள். மக்களின் பெயரால் அதிகாரஞ் செலுத்திய அதிகார சக்திகள் அனைத்தும் சாதாரண பொது மக்களின் உயிர்ப் பாதுகாப்பிலோ அல்லது அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பிலோ கிஞ்சித்தும்
அக்கறை செலுத்த முனையவேயில்லைரூபவ் மாறாக மக்களை வதைத்தே தமது அதிகாரங்களை நிலை நிறுத்த முனைந்தார்கள். எல்லாப் பக்கத்தாலும் சாதாரண பொது மக்கள் சொல்லொண்ணாத்
துயரங்களுக்குள் ஆட்பட்டார்கள். சாதாரண மனிதர்கள் உயிர் வாழ்வது என்பது மிகுந்த அச்சுறுத்தல்களுக்குள் சென்று கொண்டிருந்தது. பெண்கள்ரூபவ் சிறுவர்கள்ரூபவ் முதியவர்கள்,
இளைஞர்கள்ரூபவ் குடும்பத் தலைவர்களான ஆண்கள் என அனைவரும் தமது எதிர்காலம் குறித்து கேள்விக் குறிகளுடன் வாழும் அதி துயரமான சூழல் உருவாகியிருந்தது. இத்தகைய இடர்
மிகுந்த கால கட்டத்திலேயே கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் த.ஜெயசிங்கம் எனும் துணிகரமான ஆளுமையின் தனித்துவமான சமூக அக்கறையினை நாம் அடையாளங் காண முடிகின்றது.
அதாவது 1990 ஆம் ஆண்டு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் உருவான இயல்பற்ற சூழலில் மட்டக்களப்பின் ஏறாவூர் பற்றுரூபவ் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல கிராமங்களில் வாழ்ந்த சாதாரண பொது மக்களின் பாதுகாப்பிற்கான உறைவிடமாக வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் மாற்றமடைந்தது. கிராமங்களில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றான நிலையில் மக்கள் கிராமங் கிராமமாக இடம்பெயர்ந்து வந்தாறுமூலை பல்கலைக்கழக கட்டிடங்களில் தஞ்சமடைந்து வாழத்தலைப்பட்டனர். இவ்வாறு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தலைமையேற்று நிருவகிக்கும் பணியினை அந்நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய காலம்சென்ற பேராசிரியை மனோ சபாரத்தினம், பேராசிரியர் த.ஜெயசிங்கம் ஆகியோரும்
அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய பல பல்கலைக்கழக தொண்டர்களும் மேற்கொண்டிருந்தனர்.
அடிக்கடி பல்கலைக்கழகத்திற்குள் உட்புகுந்து கொள்ளும் ஆயுதந் தாங்கிய நபர்களிடம் பல்கலைக் கழகத்தில் தஞ்சமுற்று வாழ்ந்த மக்களுக்காகப் பேசும் மக்களின் குரலாக பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள் துணிச்சலுடன் இயங்கினார். முகாமில் வாழ்ந்த மனிதர்களின் பீதிக்கும், அச்சத்திற்கும் ஆறுதல் வழங்கவல்ல ஆளுமையாக அவர் அந்நாட்களில் பல்கலைக்கழகத்தில் வாழ்ந்தார். சுருங்கச் சொன்னால் மிகுந்த இடர் வந்த காலத்தில் பீதியுடன் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்த குரலற்றோரின் குரலாக
த.ஜெயசிங்கம் அவர்கள் ஒலித்தார் எனலாம்.
அகதிகளின் முகாமாக கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கிய போது அங்கு உட்புகுந்த ஆயுதந் தாங்கியவர்களால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு இன்றுவரை காணாமலேயே இருக்கின்ற சாதாரண பொது மக்கள் தொடர்பான சாட்சியங்களுள் முக்கியமான ஒருவராக பேராசிரியர் இன்றும் வாழ்கின்றார். இந்தக் கைதும் காணாமலாக்கப்பட்டமையுந் தொடர்பாக இவர் தயாரித்து வழங்கிய அறிக்கை இவரின் துணிவையும், நேர்மையினையும், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஓர் ஆய்வறிவாளன் என்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
அதிகார பீடங்களுக்கு அஞ்சிரூபவ் சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டு உண்மைகளை வசதியாக மறந்து விடும் சாதுரியமான புத்திஜீவியாக அல்லாமல் தனது கண்ணுக்கு முன்னாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள மனிதர்களுக்காகக் குரல் கொடுத்தரூபவ் ஒடுக்கு முறைமைகளை ஒரு ஆய்வறிவாளருக்கே உரிய துணிவுடன் எதிர்த்த ஒரு புலமையாளனாகத் தனது அறிக்கை மூலமாக இவர் தன்னை வெளிக் காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையினை ஒரு பாதுகாப்பான புறச்சூழல் நிலவிய காலத்தில் இவர் வெளியிடவில்லை மாறாக பல்வேறு முறைமைகளிலும் உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஓர் அசாதாரண காலத்திலேயே சம்பந்தப்பட்ட
தரப்புக்களிடம் அறிக்கையினை பேராசிரியர் சமர்ப்பித்திருந்தார்.
நூற்றாண்டுகள் கடந்தும்இ நிலைமாறுகால நீதி முறைமைகள் இயக்கம் பெறும் உலகின் அனுபவங்களின் பின்னணியில் 1990 கிழக்குப்பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த மக்கள்
மீதான ஆட்கடத்தல் பற்றிய பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்களின் அறிக்கை இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான சாட்சியமாகவும்ரூபவ் ஆவணமாகவும் கவனிப்பிற்குரியதாக இருந்து வருகின்றது.
பல்கலைக்கழகத் தொழிற்சங்கவாதியாக…
இலங்கையில் இலவசக் கல்வியினை உறுதிப்படுத்துவதில் பல்கலைக்கழக ஆசிரிய தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்கி வருகின்றது. அரசின் வருடாந்த பாதீட்டில் இலவசக் கல்விக்கான ஒதுக்கீட்டினை (6மூ) அதிகரிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனத்தின் (குருவுயு) ஊடாக பல்கலைக்கழக தொழிற்சங்கத் தலைவர்களும், புலமையாளர்களும் மாதக் கணக்கில் போராடி வந்தமையினைப் பற்றி நாம் அறிவோம்.
இலவசக் கல்விக்கான பொறிமுறைகளை மாற்றியமைக்கும் சூட்சுமங்கள் அடிக்கடி திட்டமிடப்படும் போது அச்சூட்சுமங்களை இனங்கண்டு அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து தேசத்தின் இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் பாரிய பணியினை
கிழக்குப்பல்கலைக்கழக ஆசிரிய தொழிற்சங்கமும் (TAEU) மேற்கொண்டு வருவதனை நாங்கள் காண்கின்றோம். விசேடமாக இலங்கையின் கல்வியைத் தனியார் மயமாக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய இலக்கினைத் தடுத்து நிறுத்தும் காப்பரண்களுள் பிரதானமானதாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்மேளனம் செயலாற்றி வருகின்றது.
இவ்விதமாக தேசத்தின் எதிர்காலத் தலைமுறையினரின் கல்விக்கான சம வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் இப்போராட்டங்களில் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள்
முன்னின்று மிகவும் காத்திரமான பணிகளை ஆற்றிய ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தலைவராக விளங்கினார். இந்த வகையில் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களின்
தொழிற்சங்கத் தலைவராகவும்ரூபவ் அனைத்து பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனத்தின் உபதலைவராகவும் செயற்பட்டு தேசத்தின் இலவசக் கல்விக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு ஆக்கபூர்வமான தேசிய தொழிற்சங்கத் தலைவராகத் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். சட்டத்துறையில் இவர் பெற்றுள்ள தகைமைகள் தேசிய தொழிற்சங்கத் தலைவருக்கான வகிபாகத்தை
வகிக்க இவருக்குப் பெரிதும் உதவியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சூழலியல் போராளியாக…
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் ஓர் ஆய்வறிவாளன் என்பதுடன் இயற்கையினை நேசிக்கும், இயற்கையின் ஒழுங்கினை மீறி நடத்தப்படும் சூழல் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் ஒரு சூழல் போராளியாகவும் இயங்கி வருகின்றார். நவீ ன அபிவிருத்தி நடவடிக்கைகளால் பாதிப்பிற்குள்ளாகும் சூழலின் சமநிலையினைப்
பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன் மொழிந்து அவற்றினை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நிருவாகத்துறையினருக்கும்ரூபவ் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் சூழலியல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிபுணராகச் சேவையாற்றி வருகின்றார். இந்த வகையில் சேது சமுத்திரத் திட்டத்தின் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்த தேசிய நிபுணர் குழுவின் அங்கத்தவராகவும்ரூபவ் சுன்னாகம் நீர்மாசுபடல்
தொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொண்ட நிபுணர் குழுவின் தலைவராகவும், UNDP இனால் முன்னெடுக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாண்டுகால (2019-2023) அபிவிருத்தித்திட்ட செயற்குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர்
கிழக்குமாகாணசபையின் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service Commission-Eastern Province)அங்கத்தவராகவும், தலைவராகவும் சேவையாற்றியிருந்தார்.
உள்ளூர் தொழில் துறையின் விருத்திக்கான முதலீட்டாளராக…
இலங்கையின் பொருளியலில் கிழக்கின் கால்நடைகளும் அதனால் கிடைக்கும் பால் வளமும் குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இன்றைய நிலையில் கிழக்கின் பால் உற்பத்தியாளர்கள் தமது பால் உற்பத்தியை சந்தைப்படுத்துவதில்
பல்தேசிய கம்பனிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
நமது சூழலில் மக்கள் மையப்பட்ட கூட்டுறவுத் துறை மிகவும் பலகீனமான நிலைமைக்குச் சென்றுள்ள பின்னணியில் உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்கள் பால் உற்பத்தியை சந்தைப்படுத்த பல்தேசிய நிறுவனங்களில் தங்கி வாழும் நிலைமை வலுவாகியுள்ளது. பாலின் விலையைத் தீர்மானிப்பவர்களாக கம்பனி உரிமையாளர்கள் மாறி வருகிறார்கள் இதனால் பாதிக்கப் படுபவர்களாக உள்ளூர் மாட்டுப் பண்ணையாளர்களே காணப்படுகின்றார்கள்.
இப்பின்னணியில் போராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் சமூக நோக்குடன் (அதிக இலாபமீட்டுவதையே இலக்காகக் கொண்ட ஒரு முதலாளியாக அல்லாது) கிழக்கில் ஒரு பால் பதனிடும் தொழிற்சாலையினை உருவாக்கி அதனை இயங்கச் செய்வதில் மிகுந்த ஆர்வஞ் செலுத்தினார். பூரணமான முதலாளித்துவக் கட்டமைப்புடன் அல்லாது பல்தேசிய வணிக நிறுவனங்களின் பிடிக்குள்ளிருந்து உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களைப்
பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.
பேராசிரியரின் இந்த முயற்சிக்கு உள்ளூர்ப் பால் பண்ணையாளர்களும், கிழக்கின் பொருளாதாரம் வளர வேண்டும் என்று அக்கறைப்படும் மத்தியதர வர்க்கத்தினைச் சேர்ந்த
நுகர்வாளர்களும் முழு மனதோடு காரியமாற்றுபவர்களாக ஒத்துழைத்திருந்தால் கிழக்கின் பால்வளத்தைக் கொண்டு கிழக்கின் பொருளாதாரத்தை ஒரு சுயசார்புத் தன்மையுடன் வளர்த்துச்
செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கும்.
கிழக்கின் வேலையற்றோருக்கான வேலை வாய்ப்புக்களையும் பெருக்கியிருக்க முடியும்ரூபவ் போசாக்கான பால் உள்ளூரிலேயே கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்திருக்கும். சமகாலத்தில் தமது பால் உற்பத்தியை நியாயமான விலையில் விற்க முடியாது இருப்பதாக ஆதங்கப்படும் உள்ளூர் கால் நடை வளர்ப்பாளர்கள் கூறும் கருத்துக்களும்ரூபவ் பால் மாவின் விலையினைத் தீர்மானிப்பதில் பால்மா கம்பனிகள் பெற்று வரும் அதிகாரமும் மிக
விரைவில் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அடியெடுத்து வைத்த மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பால் பதனிடும் தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்வதற்கான தேவையை முன்னிலைப் படுத்துகின்றது எனலாம். சுருங்கச் சொன்னால் மக்கள் நல அரசாங்கமும் அதன் அமைப்பான கூட்டுறவுச் சங்கங்களும் செய்ய வேண்டிய ஒரு பணியைப் பேராசிரியர் த. ஜெயசிங்கம் தனி
மனிதராக நின்று ஆரம்பித்தார் எனலாம். அந்த நல்ல தூர நோக்குடனான தொடக்கம் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது அதன் அடுத்த கட்ட வளர்ச்சி கிழக்கின் அபிவிருத்திக்காக அக்கறைப்படும் ஒவ்வொரு மனிதரதும் நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது எனலாம்.
இவ்விதமாக கிழக்கின் உயர் கல்வித் துறையிலும், மற்றும் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கபூர்வமான தாக்கங்களை ஏற்படுத்திய ஓர் பழுத்த ஆய்வறிவாளராகவும்ரூபவ் துறைசார் நிபுணராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற உபவேந்தரும் சிரேஸ்ட பேராசிரியரும் சட்டத்தரணியுமான தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் தனது ஒட்டுமொத்த ஆற்றுகைகள் ஊடாக
இலங்கையின் கிழக்கிலிருந்து சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு பேராளுமையாக விளங்கி வருகின்றார். இவருடைய வகிபாகம் மென்மேலும் கிழக்கிலிருந்து ஆக்கபூர்வமான பேராளுமைகள் உருவாகுவதற்கான முன்மாதிரியாக இருந்து வருகின்றது.
புதிய தலைமுறையினர் கற்றுக் கொள்வதற்கான வளச்சுரங்கமாக இவர் வாழ்கின்றார். இந்த நல்ல நிபுணத்துவ வளத்தை பயன்படுத்தி வளம் பெருக்க வேண்டியது ஆக்கபூர்வமான ஆய்வறிவாளர்களுக்கு அவசியமானது எனலாம்.