நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத் தண்டனை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் 4 வருட கடுழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு ரஞ்ஜன் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன ஊடாக இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது நகர்த்தல் பத்திரத்துடன் சத்தியகடதாசி உள்ளிட்ட ஆவணங்களையும் அவர் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்ஜன் ராமநாயக்க தற்போது அங்குனு கொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.