Home இலங்கை சறோஜா – ஜெனிற்றா – ஜெயவனிதா – கிறிஸ்தோப்புக்கும் வவுனியா நீதிமன்றம் தடை விதித்தது!

சறோஜா – ஜெனிற்றா – ஜெயவனிதா – கிறிஸ்தோப்புக்கும் வவுனியா நீதிமன்றம் தடை விதித்தது!

by admin

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு, குறித்த தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை காவல் நிலையத்தின் பிரதான காவற்துறைப் பரிசோதகரால், இல15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1)இன் படி, வவுனியா நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த நீதிமன்றம், சண்முகராஜ் சறோஜாதேவி. சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ள. ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு ஆகியோருக்கு, எதிர்ப்பு நடவடிக்கையையோ, ஆர்ப்பாட்டத்தையோ, நடைபவனியையோ முன்னெடுப்பதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்குறிப்பிட்டவர்களை, பெப்ரவரி 15ஆம் திகதி காலை 09 மணிக்கு, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More