யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பழம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடனை 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்து காவற்துறையினர் கைது செய்தனர்.
வீட்டின் உரிமையாளரான குடும்பஸ்தர் நேற்று புதன்கிழமை காலை 7 மணியளவில் பாடசாலைக்கு பிள்ளை விடச் சென்று திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதுதொடர்பில் தகவலைப் பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறை பிரிவு பொறுப்பதிகாரி,
பிரதான காவற்துறையினர் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது சந்தேக நபர் நகைகளை விற்பனை செய்ய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைகளில்
நடமாடுவதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற காவற்துறையினர் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 41 தங்கப்பவுண் நகைகளும் 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்